செந்தமிழ் வல்லார் திருமணம் செல்வக் கேசவராய முதலியாரால் தமிழ் கற்பார்க்குரிய நூல்களுள் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப் பெற்ற பெருமையுடையது இக் காவியம்.
பேராசிரியர் முன்னீ்ர்ப் பள்ளம் எஸ். பூரணலிங்கம் பிள்ளை தாம் எழுதிய இலக்கிய வரலாற்று நூல்களுள் இதன் சிறப்பினை எடுத்துக் காட்டியுள்ளார். வேறு சிலரும் இந் நூல்பற்றி உரைத்துள்ளனர்.
தமிழ்ச் சான்றோர்களின் கருத்தைக் கவர்ந்த இச் சிறு காவியம் இப்பொழுதுதான் முதன் முறையாக அச்சில் வெளிவருகிறது.