Li
உ
சிவமயம்
அணிந்துரை
சித்தாந்த சிகாமணி திரு. க. வச்சிரவேல் முதலியார்
(தலைமை ஆசிரியர், பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம்)
புராணமாவது யாது?
புராணம் என்னும் சொல்லின் பொருள்
முன் நடந்தது என்பது ஆகும்.
புராதனம் (பழைமை) என்னும் சொல்லின் திரிபே அது. புராணங்களுள்
கூறப்படும் கதைகள் பெரும்பாலும் பழைய வரலாறுகளே ஆகும். ஆயினும்,
அவ்வரலாறுகள் காலந்தோறும் பலர் வாய்ப்பட்டுச் சிலபல மாறுதல்களைப்
பெற்றே வருகின்றன. வருதலால், அவை புனைந்துரை, உருவகம், உயர்வு,
நவிற்சி என்பவற்றோடு கலந்து, பொது மக்களது கற்பனை உணர்வைக்
கவரும் வகையில் கவிஞர்களால் இயற்றப்பட்டு வழங்கி வருகின்றன.
மக்களது உணர்வும் புராணமும்
மக்களது உளநிலையைப் பொதுவாக அறிவு, உணர்வு என இருவகைப்பட
வைத்து ஆராயலாம். அவற்றுள் அறிவு என்பது இலக்கணம். தருக்கம்,
அறிவியற்கலை என்பவற்றின் பயிற்சியால் வளர்ச்சியும் திருத்தமும் உறும்.
இவ்வறிவினும் உணர்வே பெரிதும் திருந்துதற்கு உரியது. ஏனெனின்,
மக்கள்தம் உணர்வே அவர்தம் செயல்களாகப் பரிணமித்து நன்மையும்
தீமையும் பயப்பனவாக உள்ளன. இவ்வுணர்வு சிறந்த இலக்கியங்களின்
பயிற்சியால்தான் வளமுறும். புராணங்கள் இலக்கியத்தின் ஒரு சிறந்த பகுதி
ஆகும்.
புராணநூல் தொகுப்பின் தொன்மை
புராணம் எனப்படும் நூல் தொகுப்பு மிகப் பழங்காலத்திலேயே
ஏற்பட்டிருக்கவேண்டும் எனத் தெரிகின்றது. அது, மிகப் பழங்காலத்தில்,
வேதங்களுக்கு அடுத்த நிலையில் சிறப்புக் கொடுக்கப்பட்டு நன்மக்களால்
ஓதியுணரப்பட்டது என்பதில் ஐயம் இல்லை. சாந்தோக்கியம் என்னும்
உபநிடத்தில் நாரதர் உபதேசம்பெற்ற வரலாறு கூறப்படுகிறது. நாரதர்
சனற்குமாரமுனிவரை அடுத்துத் தமக்கு உறுதி உரைத்தருளவேண்டும்
என்றார் :-
சனற்குமாரர் : உமக்குத் தெரிந்தவை இன்னவை என்பதைக் கூறுக ;
பின்னர், யாம் அவற்றிற்கு மேம்பட்டதனை அறிவுறுத்துவோம்.
நாரதர்: பெருமானே! இருக்குவேதம், யசுர்வேதம், சாமவேதம்,
நான்காவதாக அதர்வவேதம், ஐந்தாவதாக இதிகாசபுராணம் ----------- இவையிற்றைக் கற்றுளேன் - என்பது அவர்களுக்கு இடைநிகழ்ந்த பேச்சு.
இப்பேச்சிற்போல, உபநிடதங்களில் பல இடங்களில்
இதிகாச புராணம்
என்னும் தொடர் வருகின்றது. இதனால், புராணங்கள் வேதங்களோடு .
|