Lxi
உ
சிவமயம்
முதுபெரும்புலவர்
சீலத்திரு. சிவஞானதேசிக சுவாமிகள் அவர்கள்
ஆசியுரை
‘நூலுணர்வுணரா நுண்ணியோன்’ ‘மாலே பிரமனே மற்று ஒழிந்த
தேவர்களே நூலே நுழைவரியான் நுண்ணியனாய் வந்து அடியேன் பாலே
புகுந்து பரிந்துருக்கும் பாவகம்’ என்று திருவாசகம் உணர்த்திற்று.
அந்நுண்ணியபொருள் சமயாதீதப்பழம் பொருள். சமயங்களுள் தலையாயது
சைவமே. அஃது ஆறாறா?யுள்ள அகம், அகப்புறம், புறம், புறப்புறம் என
நால்வேறுபட்ட இருபத்துநான்கு சமயங்களுக்கும் வேறாய் இருபத்தைந்தாவது
சமயம் ஆகும். இதன் முடிவே சமயாதீதப் பழம் பொருளின் நிலை.
’ஐயஞ்சினப்புறத்தான்’ என்பதற்கு ஈதும்பொருளாகும். ‘அப்புறத்தான்’ என்றது
சமயங் கடந்த மோன சமரசத்தைக் குறித்து நின்றது. அச் சமரச நிலையைப்
பெற அச் சமயாதீதப் பழம்பொருள் தன் நுண்ணிய நிலையை நாம்
அறியும்வண்ணம் பரியநிலையில் தன்னைக் காட்டித் தரல்வேண்டும்.
அகளமாய் ஆரும் அறிவரிதாம் அப்பொருள் சகளமாய் வந்து
அருளப்பெற்றவரே நம் சமயாசாரியர் முதலிய அருளாளர் பலரும்.
அருளாசிரியர் ஆன அவர்க்குரிய நெறியே அவர் திருவடி வழிபாட்டை
மறவாத நமக்கு முரியது. ஏனைய நெறிகள் அவ்வ(ச் சமயத்த)வர்க்குரிய
பெருநெறிகளே ஆகும். ஆயினும் அவை நமக்குரியனவும் பெரியனவும்
அல்ல. இவ்வுண்மையை உணர்த்துவது இது:-
“நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைவேனைச்
சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணம்
குறியொன்றும் இல்லாத கூத்தன், தன்கூத்தை, எனக்
கறியும்வண்ணம் அருளியவாறார் பெறுவார் அச்சோவே.’’ |
இத்திருவாசகத்தில், “குறியொன்றும் இல்லாத கூத்தன்’’ என்றது அகளமாய்
ஆரும் அறிவரிதாய் நின்ற அதீதப்பொருளை. “தன் கூத்தை எனக்கு
அறியும்வண்ணம் அருளியவாறு’’ என்றது சகளமாய் வந்தவாற்றை. அது
சகளமாய் வருதல் என்றால் என்ன? அவ்வரவு அருள் நூல்களான்
உணரற்பாலது. உணர்தற்கும் உணர்த்தற்கும் அரிதேயாம். ஆயினும்,
நம் ஆசிரியர் பலரும் உணர்ந்துணர்த்திய உண்மையுரைகளை யொட்டி
யுணர்ந்தால் நமக்கும் நன்கு விளங்குவ துறுதி.
அந்நுண்பொருள் நமக்கு எண்பொருளாகின்றது. எவ்வாறு? அவ்வாற்றை
மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்து
|