கம்பனின்
காவியத்தை விஞ்சிய காவியம் என்றுரைத்தலும் மிகையன்று.
இந்நூலை இயற்றிய புலவர் குழந்தை திருக்குறளுக்கும்
புதுமையான - பகுத்தறிவுச்
சிந்தனையில் தோய்ந்த உரையினை வடித்தளித்தவர் என்பது மேலும் ஒரு
சிறப்பாகும்.
பெரியாரின் தொண்டராக - பேரறிஞர் அண்ணாவின்
தோழராக விளங்கியவர்
புலவர் குழந்தை.
இராவண காவியம் எதற்கு என்று புலவர் குழந்தை
அவர்களே “தமிழர்
பண்பாடு நாகரிகம், மணமுறை, வாழ்க்கை முறை, ஆட்சி முறை, வீரம், கொடை,
நடை, மேம்பாடு, ஒருமை வாழ்வு, ஒழுக்கமுறை, பழந்தமிழ் நாட்டின் வரலாறு,
தமிழர்
தந் தாய் மொழியாந் தமிழ் மொழியைப் போற்றி வந்த வரலாறு, தமிழ்
வரலாறு, தமிழ்
மக்கள் உலக முதன் மக்களாய், உலக மக்களுக்கே எடுத்துக் காட்டாக வாழ்ந்து
வந்தநிலை, ஆரியர் வருகை, ஆரிய நாகரிகம், ஆரியர் கொள்கை, ஆரியச்
சூழ்ச்சி
இன்ன பல பழந்தமிழ் வரலாறுகளையெல்லாம் இன்றைய தமிழ் மக்கள் அறிந்து,
இன்றுள்ள தந்நிலைக்கிரங்கித் தமிழின வுணர்ச்சியுற்று ஒன்றுபட்டு வாழ்தற்
பொருட்டு வீறிட்டெழவே இராவண காவியம் செய்யப்பட்டது” என்று கூறுகிறார்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த காவியத்தை எங்களது
பதிப்பகத்தின் வாயிலாக
வெளியிடுவதற்கு நாங்கள் உண்மையிலேயே பெருமகிழ்வு கொள்கின்றோம்.
இந்நூல் வெளிவர உறுதுணையாய் இருந்த புலவர்
செ. இராசு அய்யா
அவர்களுக்கும், அட்டை ஓவியத்தை வரைந்தளித்த திரு. மாருதி
அவர்களுக்கும்,
அச்சுப்படிகளைத் திருத்தி உதவிய புலவர். வெற்றியழகன் அய்யா
அவர்களுக்கும்
எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
எங்களது இலக்கிய வெளியீடுகளைக் குறைந்த
விலையில் பெற்று, நிறைந்த
பயனை அடைந்த தமிழ் மக்கள் இந்தக் காவியத்தையும் பெற்றுப் பயனடைவர்
என்பது திண்ணம்.
|