| திருநாவுக்கரசர் |
| திருஏகாதச மாலை |
| பதிகமே ழெழுநூறு பகருமா கவியோகி |
| பரசுநா வரசான பரமகா ரணஈசன் |
| அதிகைமா நகர்மேவி அருளினா லமண்மூடர் |
| அவர்செய்வாதைகள்தீரும் அனகன்வார் கழல்சூடின் |
| நிதியரா குவர்சீர்மை உடையரா குவர்வாய்மை |
| நெறியரா குவர்பாவம் வெறியரா குவர்சால |
| மதியரா குவர்ஈசன் அடியரா குவர்வானம் |
| உடையரா குவர்பாரில் மனிதரா னவர்தாமே. |
-தி.11 நம்பியாண்டார் நம்பி |