குருபாதம்

பன்னிரு திருமுறை ஆசிரியர்கள்

1திருஞான சம்பந்தர்2வாகீசர்3சுந்தரர்
                 4திருவாத வூரர் மற்றைத்

5திருமா ளிகைத்தேவர் 6சேந்தனார் 7கருவூரர்

                தெள்ளு8பூந் துருத்தி நம்பி

வருஞான 9கண்டரா தித்தர்10வே ணாட்டடிகள்

                வாய்ந்த11திரு வாலி யமுதர்

மருவு12புரு டோத்தமர்13சேதிராயர்14மூலர்

                மன்னுதிரு 15ஆல வாயார்

ஒரு 16காரைக் காலம்மை 17ஐயடிகள்18சேரமான்

                ஒளிர்19கீரர் 20கல்லாடனார்

ஒண்21கபிலர்22பரணர்மெய் உண 23ரிளம்பெருமானொடு

                ஓங்கும்24அதி ராவடிகளார்

திருமேவு 25பட்டினத் தடிகளொடு

                26நம்பியாண்டார் நம்பி 27சேக்கிழாரும்

       சிவநெறித் திருமுறைகள் பன்னிரண் டருள்செய்த

                தெய்விகத் தன்மையோரே.

- புலவர். திரு. வை. தருமலிங்கம் பிள்ளை.
தமிழாசிரியர், தருமை ஆதீனத் தேவாரப் பாடசாலை,
தருமபுரம்.