|
வாழ்த்து
| வையம் நீடுக மாமழை மன்னுக |
| மெய் விரும்பிய அன்பர் விளங்குக |
| சைவ நன்னெறி தான்தழைத் தோங்குக |
| தெய்வ வெண்திரு நீறு சிறக்கவே. | |
-பெரிய புராணம். |
| |
வான்முகில் வழாது பெய்க |
| |
மலிவளம் சுரக்க மன்னன் |
| |
கோன்முறை அரசு செய்க | | |
குறைவிலாது உயிர்கள் வாழ்க |
| | நான்மறை அறங்கள் ஓங்க |
| |
நற்றவம் வேள்வி மல்க |
| | மேன்மைகொள் சைவ நீதி |
| |
விளங்குக உலக மெல்லாம். |
|
-கந்தபுராணம். |
| மல்குக வேத வேள்வி வழங்குக சுரந்து வானம் | |
பல்குக வளங்கள் எங்கும் பரவுக அறங்கள் இன்பம் | |
நல்குக உயிர்கட் கெல்லாம் நான்மறைச் சைவம் ஓங்கிப் | |
புல்குக உயிர்கட் கெல்லாம் புரவலன் செங்கோல் வாழ்க. | |
-திருவிளையாடற் புராணம்.
|
| |
திருவார் கமலைப் பதிவாழ்க அப்பதி |
| |
சேரும்நின்றன் |
| | மருவார் மரபும் திருநீறும் கண்டியும் |
| |
வாழ்கஅருட் |
| | குருவாகும் நின்றன் திருக்கூட்டம் வாழ்கநற் |
| |
கோநிரைகள் |
| | தெருவாழ் தருமைத் திருஞான சம்பந்த |
| |
தேசிகனே. |
|
-ஆதீன அருள் நூல். |
| |