மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில்
சைவ சித்தாந்த தத்துவத்துறை நிறுவுவதற்கும், தருமை ஆதீன இரண்டாவது அனைத்துலக சைவ
சித்தாந்த மாநாடு மலேசியாவில் நடைபெறுவதற்கும் உறுதுணையாக இருந்தவர்.
தேவகோட்டை சேவுகன் அண்ணாமலைக்
கல்லூரியில் இவரது பெற்றோரின் பெயரால் இவர் வழங்கியுள்ள நிதியால், பல ஏழை மாணவர்
பயன்பெறுகின்றனர். தருமை ஆதீனம் 1986இல் கோலாலம்பூரில், 'சைவ சித்தாந்தக் கலாநிதி'
என்னும் பட்டமும், கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானம், 1990இல் 'சைவ
சிகாமணி' என்னும் பட்டமும் அளித்து இவரைச் சிறப்பித்துள்ளன. மலேசியா அருள்நெறித்
திருக்கூட்டம் 1991இல் இவரது வாழ்க்கைத் துணைவி திருமதி ராம.தெய்வானை அவர்களுக்குச்
'சிவநெறிச் செல்வி' என்னும் பட்டம் அளித்துச் சிறப்பித்தது.
மலேசியா, டான் ஸ்ரீ திரு. மு.
சோமசுந்தரம் அவர்களின் அறக்கொடையாக இத்திருமுறை வெளியிடப் பெறுகிறது.
குறிப்பு:
இத்திருமுறைப் பதிப்பின் விற்பனைத்
தொகை மீண்டும் இத்திருமுறையை வெளியிட்டுவரப் பயன்படுத்தப்பெறும்.
|