பயனாய்
உள்ள இறைவனைத் தம்மைப்போலவே இசைத்தமிழால் பாடி ஈறில் இன்பத்தை எய்தும் நெறி தமக்குப் பின்னரும் அற்றொழியாது வளர வேண்டும் என்பதே தேவாரம் அருளிச்செய்த ஆசிரியன்மாரது திருவுள்ளமாகும். திருவுள்ளத்தின்படி காணப்பட்ட இசைத்தமிழின் வளர்ச்சியே திருவிசைப்பாக்களின் தோற்றம். முதல்
இராசராச சோழனாகிய தந்தையைப் போலவே வெற்றியிலும். சிவபத்தியிலும்
சிறந்து விளங்கித் தந்தை தஞ்சைப் பெருவுடையார் கோயிலைக்
கட்டியதுபோலக் கங்கைகொண்ட சோழேச்சரத்தைக்கட்டிய முதல்
இராசேந்திரசோழன். தந்தை தேவாரத் திருப்பதிகங்களை
ஏழு திருமுறையாக வகுக்கச்செய்தது போலவே
திருவிசைப்பா திருமந்திரம் முதலிய
திருவருட்பாடல்களை மேலும் சில
திருமுறைகளாக நம்பியாண்டார்
நம்பிகளைக்கொண்டு வகுப்பித்தான்.
இராசராசன் காலத்தில் ஏறக்குறையப்
பள்ளிச்சிறுவர் நிலையிலே
இருந்த நம்பியாண்டார் நம்பிகள்,
இராசேந்திரன் காலத்தில் வயது முதிர்ந்து சிவானுபூதியில்
திளைத்திருந்தவராவர். அந்நிலையில் அவர்
அவனது வேண்டுகோளின்படி
திருவிசைப்பாக்களை
ஒன்பதாந் திருமுறையாகவும், திருமந்திரத்தைப்
பத்தாந் திருமுறையாகவும், திருவாலவாயுடையார்
திருமுகப்பாசுரம்,
காரைக்காலம்மையார் திருப்பாடல்கள்
முதலியவற்றோடு இறுதியில் தமது பாடல்களையும் தொகுத்துப்
பதினொன்றாந் திருமுறையாகவும் வகுத்தருளினார்
என்க. இங்ஙனம் திருமுறைகளை வகுப்பித்த
அரசர் இருவராயினும், வகுத்த ஆசிரியர்
ஒருவரேயாதலின் ஒன்றுமுதல் பதினொன்று முடிய
உள்ள திருமுறைகள் பதினொன்றும் ஒரு
சமயத்திலே வகுக்கப்பட்டன போலத் திருமுறைகண்ட
புராணம் கூறிற்று. ‘மந்திரங்கள்
ஏழுகோடியாதலின் தேவாரங்களை
ஏழு திருமுறைகளாகவும், மந்திரங்கள்
பதினொன்றாலின் திருமுறைகளைப் பதினொன்றாகவும்
வகுத்தார்கள்’ என்று திருமுறைகண்ட
புராணம் கூறியதற்கேற்ப, நம்பியாண்டார்
நம்பிகளாகிய அருளாளரால் வகுக்கப்பட்ட
பதினொரு திருமுறைகளே சைவ சமயத்தின் தலையாய நூல்களாக விளங்கின.
அதன்பின்னர்த் திருத்தொண்டர்
புராணம் தில்லைக் கூத்தப்பெருமான்
அடியெடுத்துக் கொடுக்கப் பாடப்பட்டு அப்பெருமான், ‘இதனை |