| மெய்யுந் தலமிசை விழுமுன் பெழுதரு மின்றாழ் சடையொடு நின்றாடு மையன் றிருநட மெதிர்கும் பிடுமவ ரார்வம் பெருகுத லளவின்றால். |
167 1433. | இத்தன் மையர்பல முறையுந் தொழுதெழ "வென்றெய் தினை?" யென மன்றாடு மத்தன் றிருவருள் பொழியுங் கருணையி னருள்பெற் றிடவரு மானந்த மெய்த்தன் மையினில் விருத்தத் திருமொழி பாடிப் பின்னையு மென்மேலுஞ் சித்தம் பெருகிய பரிவா லின்புறு திருநே ரிசைமொழி பகர்கின்றார். |
168 - தேவாரம் கோயில் - திருவிருத்தம் ஒன்றி யிருந்து நினைமிக் ளுந்தமக் கூனமில்லை கன்றிய காலனைக் காலாற் கடிந்தா னடியவர்க்காச் சென்று தொழுமின்கள் தில்லையுட் சிற்றம் பலத்துநட்டம் "என்றுவந் தா"யென்று மெம்பெரு மான்றன் திருக்குறிப்பே. 2 கோயிற்றிருநேரிசை - பண் கொல்லி பத்தனாய்ப் பாட மாட்டேன் பரமனே பரம யோகீ யெத்தினாற் பத்தி செய்கே னென்னைநீ யிகழ வேண்டா முத்தனே முதல்வா தில்லை யம்பலத் தாடு கின்ற அத்தாவுன் னாடல் காண்பா னடியனேன் வந்த வாறே. 1 8. திருச்சத்திமுற்றம் - திருவடிசூட்ட வேண்டுதல் - புராணம் 1459. | "கோவாய் முடுகி" யென்றெடுத்துக் "கூற்றம் வந்து குமைப்பதன்முன் பூவா ரடிக ளென்றலைமேற் பொறித்து வைப்பா" யெனப்புகன்று நாவார் பதிகம் பாடுதலு நாதன் றானு "நல்லூரில் வாவா" வென்றே யருள்செய்ய வணங்கி மகிழ்ந்து வாகீசர். |
194 - தேவாரம் திருச்சத்திமுற்றம் - திருவிருத்தம் கோவாய் முடுகி யடுதிறற் கூற்றங் குமைப்பதன்முன் பூவா ரடிச்சுவ டென்மேற் பொறித்துவை; போகாவிடின் மூவா முழுப்பழி மூடுங்கண் டாய்முழங் குந்தழற்கைத் தேவா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே. 1 9. திருநல்லூர் - திருவடி தீக்கை - புராணம் 1460. | நன்மைபெரு கருணெறியே வந்தணைந்து நல்லூரின் மன்னுதிருத் தொண்டனார் வணங்கிமகிழந் தெழும்பொழுதி லுன்னுடைய நினைப்பதனை முடிக்கின்றோ மென்றவர்தஞ் சென்னிமிசைப் பாதமலர் சூட்டினான் சிவபெருமான். |
195 1461. | "நனைந்தனைய திருவடி யென் றலைமேல்வைத் தா"ரென்று புனைந்ததிருத் தாண்டகத்தாற் போற்றிசைத்துப் புனிதரரு |
|