|
சந்நிதானங்களின் அருளினால் நிகழ்ந்தது. இப்போது அப்புராணம் முழுமையும் அச்சு நிறைவாகிய
வெளியீட்டு விழாவும் அவர்களது ஆசியின் வழியே அவர்களாதீனத்துக்குட்பட்ட ஆச்சாபுரப் பதியினில்
கொண்டாடப் பெறுவது திருவருட் சம்மதமாகும்.
|
|
5. இப்பகுதி வெளிவரு மிடையில் காகிதமும் அச்சுச் செலவும் பிறவுமாகப் பல வகையாலும் முட்டுப்பாடுகள்
நேர்ந்த போதெல்லாம் "உடுக்கை யிழந்தவன் கைபோல வாங்கே, இடுக்கண் களைவதாம் நட்பு" என்றபடி,
உற்றிடத் துதவிகள் பலவும் மனமுவந்து செய்த எனது ஆருயிர்நண்பா கோவை - திரு.கா.ச.இரத்தின சபாபதி
முதலியார்
(C.S.R.) அவர்களுக்கு என் கடப்பாடுடைய நன்றியைச் செலுத்துகின்றேன்.
|
|
6. இவ்வெளியீட்டில் முன்போலவே எல்லா வகையாலும் உதவி செய்த எல்லாப் பெருமக்களுக்கும் என்
மனமார்ந்த நன்றியைச் செலுத்துகின்றேன்.
|
|
கோயமுத்தூர்
சேக்கிழார் நிலையம்
1-6-1950 |
அடியேன்,
C.K.சுப்பிரமணிய முதலியார்
பதிப்பு-உரை-ஆசிரியன் |
|
|
|