வழங்கிய புலவர் பெருமக்களுக்கும், விழா நிகழ்ச்சிகளைச் சிறக்கச் செய்த எல்லாப்
பெருமக்களுக்கும், நெடுந்தூரங்களிலிருந்து வந்து விழாவிற் கலந்து கொண்டு மகிழ்ச்சி
தந்த
எல்லா அன்பர்களுக்கும் எனது கடப்பாடுடைய நன்றியை தெரிவித்துக்
கொள்கின்றேன்.
|
இமய மலைச்சாரலில் உள்ள திருக்கேதார நாதர் படங்களையும் மேற்படி
யாத்திரை வரலாற்றையும் அங்கு நேரிற் சென்று வழிபட்டுவந்த பேரன்பர் திரு. சொ.
திருநாவுக்கரசு செட்டியார் உதவினார். திருவொற்றியூர், திருக்கச்சூர் ஆலக்கோயில்,
திருமுல்லைவாயில், ஞாயிறு, திருமயிலை இந்தப்
பதிகளின் படங்களை அன்பர் திரு.
P.E. காபாலி அவர்கள் (சென்னை விவசாய இலாகா உத்தியோகஸ்தர்)
எடுத்துஉதவினார். ஸ்ரீலஸ்ரீ தருமபுரம் மகாசந்நிதானங்கள் 22 படங்கள்
பிளாக்குகளாகவே உதவியருளினார்கள்.
பாண்டிநாட்டுத் திருச்சுழியல்,
திருக்கானப்பேர் இவற்றின் படங்களை எனது மைத்துனர் அன்பர்
திரு. S.
தருமலிங்க முதலியார் உதவினார்கள். திருமருகல், திருச்செங்காட்டங்குடி,
நாகப்பட்டினம்
என்னும் பதிகளுக்குத், தாமே சென்று படங்கள் எடுத்து உதவியவர்
எனது உறவினரும்பேரன்பருமாகிய,
திருச்சி சில்லா, கொசூர் கர்னம் B.
வைத்தியலிங்க முதலியார் ஆவர். சீகாழிக் கணநாதர்
கோயிலை மேற்படியூர்
மிராசுதாரரும் பேரன்பருமாகிய திரு.C. சீனிவாச முதலியார் தாமே
எடுத்து
உதவினார். அவிநாசி, திருமுருகன் பூண்டிப் படங்களை அடியேன் நேரில் போய்
எடுத்துவந்தேன்;
அதற்கு உதவியாகத் தமது (மோட்டார்) விசை வண்டியைக்
கோயமுத்தூர் மிராசுதாரரும் என்
உறவினரும் ஆகிய அன்பர் திரு R. பசுபதி
முதலியார் உதவினார். இவர்கள் எல்லோருக்கும்
என் மனமார்ந்த நன்றி
செலுத்துகின்றேன். சென்னை விவசாயத்துறையில் அரசாங்கத்தில்
வெளியிடும் “மேழிச்
செல்வம்” என்றப் பத்திரிகையின் ஆசிரியர் என்ற உத்தியோகத்திலமர்ந்து
இப்புராண
உரைக்கு வேண்டிய, தொண்டை நாட்டுப்படங்களும் பிறவும் எடுக்கவும், பிளாக்
செய்யவும்,
மற்றும் அச்சுக்கு வேண்டிய பலபல உதவிகள் செய்து அரிய பணிபுரிந்து
வந்தவர் எனது இளைய மைத்துனரும்
அன்பருமாகிய ஸ்ரீ இராசரத்தின முதலியார்
ஓராண்டின்முன் சிவபதமடைந்து விட்டார். அவர் செய்துதவிய
அரிய சேவைகளைப்
பாராட்டி நன்றி கூறி, அவரது இன்னுயிர் இறைவன் றிருவடிக்கீழ் அமைதிபெற்று
இன்புறுவதாக என்று திருவருனைச் சிந்திக்கின்றேன். அவர்கள் மேலும் தொடர்ந்து
செய்ய நின்ற
பல உதவிகளையும் இவ்வெளியீடு இழந்துபட நேர்ந்தமை பற்றி எனது
வருத்தத்தையும் தெரிவித்துக்
கொள்கிறேன்.
|
புராண உரைப்பகுதிகளை நமது சென்னை அரசாங்கத்தாருடைய அதிகாரத்தின்
கீழுள்ள எல்லாப்
பள்ளிக்கூடங்களிலும், புத்தகசாலைகளிலும் வாங்கி
வைக்கலாமென்று சிபார்சு செய்து சென்னை
கல்வியிலாகா பேரதிகாரி (Director of
Public Instruction) அவர்கள்
(Roc. No.265
|
|