நக்கீரர் திருமுருகாற்றுப் படையில் இத்தலத்தைப் பற்றி 51 வரிகளில்
வியந்து கூறியுள்ளார். இந்தப் பழநித் திருப்புகழ் விரிவுரை நூலை
வானதி பதிப்பகத்தார் வெளியிடுகின்றார்கள்.வானதி பதிப்பகம் உத்தமமான
உள்ளன்புடன் சமயத்துக்கும், தமிழுக்கும் அயராது தொண்டு புரிகின்றது. திருவருள் துணையினால் நான்காவது படைவீடாகிய
சுவாமிமலைத் திருப்புகழ்ப் பாடல்கள் 38-க்கும் விரிவுரை எழுதி நான்காம்
தொகுதி அண்மையில் வெளிவந்துள்ளது. ஐந்தாம் படைவீடாகிய குன்றுதோறாடல்
முதற்பகுதி 114 திருப்புகழ்ப் பாடல்கள் விரிவுரைகளும் அதன் இரண்டாம்
பகுதிக்கு விரிவுரைகளும் மற்றப் பகுதிகளும் இறைவன் அருளால் விரைவில்
வெளிவரும். இத்தகு வித்தகம் நிறைந்த திருப்புகழ்
விரிவுரைகளை அன்பர்கள் ஓதி உணர்ந்து, எல்லா நலன்களையும் பெற, எம்பெருமானை
வேண்டிக் கொள்கிறேன்.
|
17.10.79
குமரன் குன்றம்
குரோம்பேட்டை
சென்னை |
அன்பன்
கிருபானந்தவாரி |
|