கவிக்கோ
அப்துல் ரகுமான் அவர்கள் வழங்கிய
வாழ்த்துப் பா
வளர்க
நன்றே
மேலுறையும் இறையவனின்
வேத அருட் கடல்முகந்து
மேன்மை ஒங்கச்
சூலுறையும் மேகமெனத்
தூயமழை பொழிந்ததிருத்
தூதர் வாழ்வைப்
பாலுறையும் சுவைத்தமிழில்
பாவியமாய்ப் படைத்தளித்த
பாவின் வள்ளல்
மாலிறையன் நேயமன
மலர்வாசம் வையமெலாம்
வளர்க நன்றே!
அப்துல் ரகுமான்
|