முகவுரை

உலகுக்கு அருட்கொடையாகவும், முன்மாதிரி யாகவும் உதித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது உமறுப்புலவர் உள்ளிட்ட பல பாவலர்கள், நாவலர்கள் பாக்களை யாத்தும், பாராட்டுரைகளை  சாத்தியும்  உள்ளனர்.   யுகத்தின் இறுதி நாள் வரை இது தொடரும். தமிழகத்தின் தனிப்பெரும் சொல்லேருழவரும், எல்லாக் கருத்துகளின் சிந்தனையாளருமாகிய ஞானபாரதி வலம்புரிஜான் அவர்களின் “நாயகம் எங்கள் தாயகம்” என்ற வசன கவிதை நூல், மதிப்புரைக்காக என் கவனத்திற்கு வந்தபொழுது அதைப் படித்துப் பிரமித்தும் பிரேமித்தும் போனேன்.

   முஸ்லிம்  அல்லாதவராக  இருந்தபோதும்  நபிகள்  நாயகம்  (ஸல்)  அவர்களின் மீது கொண்டிருக்கும் ஆழ்ந்த ஈடுபாடும், வரலாற்றுத் தெளிவும் காரணமாக எழுதப்பட்ட இக்காவியத்தினை இசுலாமியத் தமிழர்கள் மட்டுமல்ல; தமிழறிந்த ஒவ்வொருவரும் மிகுந்த வரவேற்பு அளிப்பது அவசியம்.

   தமிழர்கள்  வெகுவாக  அறிந்த  வரலாறுகளிலிருந்து  உதாரணங்களை  இக்காவியத்தில் உவமையாகக்  கையாண்டுத்  தமிழ்கூறும்  நல்லுலகிற்கு  ஓர்  புதிய பார்வை வெளிச்சத்தைப் பதித்திருக்கிறார்.

   இக்காவியத்தின் மூன்றாம் பதிப்பை எங்களது ஆசாத் பதிப்பகம் சார்பாக வெளியிடும்  வாய்ப்பை  அவர்  தந்தமைக்கு  நான்  மனதார  நன்றியைத்  தெரிவிப்பதுடன் இப்பதிப்பில் எங்களுக்கு  ஒத்துழைத்த   மற்றும்  உதவிய  கவிஞர் இ. பதுருத்தீன்,  அல்ஹாஜ்  ஏ.எம். பாரூக்,  எம்.எம்.அன்சாரி  (லைட்ரூஃபிங்), ஆலிம் செல்வன் அஹமது ஷம்சுதீன், விக்டரி மேன்சன்  காதர்  மைதீன்,  அக்தர் ஹுசேன் ஆகியோருக்கும் நன்றி கூறுகிறோம்.

 

 

எஸ்.எம்.இதாயத்துல்லா