முகப்பு

தொடக்கம்


இ இடை - இதுபொழுது
இகந்து - மறைந்து
இகல் - பகை
இசை உளர் - இசை நரம்புகளைத் தடவுகின்ற
இசைப்பகை - பத்திரன் பகைவனாகிய ஏமநாதன்
இசைப் பாணன் - இசைவல்ல பாணன் (பாண பத்திரன்)
இசை விதி - இசை நூல் முறை
இடக் கீழ் - இடப் பக்கம்
இடக்கை - இடக்கையால் கொட்டும் ஒரு தோற்கருவி
இடங்கர் - முதலை
இடந்து - பெயர்ந்து
இடாகினி - இடாகினிப் பேய்கள்
இடி - மா
இடும்பை - துன்பம்
இடை - பொழுது, சமயம்
இடைக்காடன் - சங்கப் புலவருள் ஒருவர்
இடைதல் - வருந்துதல், மனந்தளர்தல்
இடையற - வெற்றிடம் இன்றி, முழுதும்
இணர் - ங்கொத்து,
இணைமுகப் பறை - இரண்டு முகங்களையுடைய ஒரு வகைப் பறை
இணையா - ஒப்பில்லாத
இதண் - பரண்
இதழ் - இதழ்
இதழி - கொன்றை
இதைப் புனம் - புதுக் கொல்லை
இந்தனம் - விறகு
இப்பி - முத்துச் சிப்பி
இபம் - யானை
இம்பர் - இவ்வுலகம்
இமைக்குறும் - ஒளிவீசும்
இமையவர் - வானவர் (இமையாத நாட்டம் பெற்றவர்)
இயங்கினை - நடந்தாய்
இயம் - ஒலி
இரட்ட - ஒலிக்க, உச்சரிக்க (பாடும் பண் தவறி வேறு பண் ஒலித்தல்)
இரண்டு அறி பெயர் - படைப்பு, காப்பு என்ற இரண்டும் அறிந்த நான்முகன், திருமால்
இரதம் - இரசம்; தேர்
இரவி - சூரியன்
இரவி தெறு மணி - சாதுரங்கம் என்னும் மாணிக்கம்
இரு சுடர் - சந்திர சூரியர்
இருட்பகை மண்டிலம் - சூரிய மண்டிலம்
இருத்திய - அமைத்த
இருதிணை - உயர்திணை, அஃறிணை
இரு நிலம் - இவ்வுலகு, அவ்வுலகு
இரு மனம் - இரு வகைப்பட்ட மனம் (ஒரு நெறியில் நில்லாத உள்ளம்)
இரு முனிவர் - இரண்டு முனிவர் (பதஞ்சலி, வியாக்கிரபாதர்)
இருமை - பெருமை
இரு வகை ஏழ் - பதினான்கு
இரு வடிவு - சத்தியும், சிவமும்
இருவி - அரிந்த தினையின் தாள்
இரு வினை - பிறத்தற்குக் காரணமாகிய பசுவினை, பாசவினை என்னும் இரண்டு வினைகள்; நல்வினை, தீவினை
இருள் - இருட்டு, மயக்கம்
இருள் நாடு - நாக நாடு
இருள் மணி - நீல மணி
இரை - உணவு
இல் - இருக்கை
இல் உறை கல் - அம்மிக் கல்
இல்லம் - வீடு
இலக்கு - குறி
இலங்க - விளங்க
இலை நெடு வேல் - தகட்டு வடிவமான முனையுள்ள நீண்ட வேல்
இவர்தல் - விரும்புதல்
இவறிய - எழுந்த, ஆசைப்பட்ட
இழிச்சிய - இறக்கிய
  -  
இழை எனச் செறித்து - ஆபரணமாகப் பூண்டு
இழைக்கும் - அமைக்கும்
இளங் கா - பசிய இளமரச் சோலை
இளங்கோவினர் - இளவரசர்
இளவல் - இளையவன் (தம்பி)
இறடி - கருந்தினை
இறடிஅம் சேவல் - தினைக் காவல்
இறந்து - கடந்து சென்று
இற (இறவு) - இறா மீன்
இறால் - தேன் கூடு
இறுத்தல் - விடை சொல்லுதல்; பதிலுரை சொல்லுதல்
இறும்பு - குறுங் காடு
இறை - முன்கை
இறைப்ப - சிந்த
இறையோன் - கடவுள் (எங்கும் நிறைந்தவன்)
இன்னல் - மனக் கோட்டம், துன்பம்
இனம் - வருக்கம், சுற்றம்
இனன் நூல் - சூரியன் செய்த குதிரை இலக்கண நூல்
இனைய - இவை போன்ற

மேல்

அகர வரிசை