முகப்பு

தொடக்கம்


எக்கண் - எந்த இடத்தில்
எக்கர் - இடுமணல், மணல் மேடு
எங்கையர் - எனது தங்கையர்
எட்டு எட்டு - அறுபத்து நான்கு, அறுபத்து நான்கு
திருவிளையாடல்
எடுத்த - நிமிர்த்த
எடுத்து - காட்டி
எடுத்துப் பரப்பிய - விரித்து உரைத்த
எண்ணா - ஆராய்ந்து
எண்ணாது - மதியாது
எண்தக - கருத்துக்கு ஏற்ப
எண் தோட்
செல்வி
- எட்டுத் தோள்களையுடைய இறைவி
(காளியம்மை)
எண் பட - எண்ணம் ஈடேற
எண் வழி
தடைந்து
- எண்ணாமல் தடுத்து
எதிர - எதிர்ப்பட
எய்ப்பு - இளைப்பு
எயிற்றியர் - வேட்டுவ மகளிர்
எயிறு - பல், பன்றிக் கொம்பு
எயினர் - வேடர்
எயினர் பாவை - வேடர் குலப் பெண் (வள்ளி நாச்சியார்)
எரி - தீ, வெப்பம்
எரி சுடர் - சூரியன்
எரிந்து - சினந்து
எரியகல் - எரியை உடைய அகல்; அகலில் எரிகின்ற
தீப்போல் சிவபெருமான் கையகத்துள்ள தீ
எருத்து - பிடரி
எருவை - கழுகு
எழில் - அழகு
எழிலி - மேகம்
எழு - கணைய மரம், தூண்
எழுகதிர் - எழுகின்ற கதிரவன், உதய சூரியன், மிக்க ஒளி
எழுதி - வரைந்து
எழுதுமின் - கோலம் இடுமின்
எழுமலை - உதயகிரி
எழுமலை
பொடித்தவர்
- கிரௌஞ்சம் என்னும் மலையைப் பிளந்த
முருகக் கடவுள்
எழுவெயில் - இளவெயில்
எள்ளினர் - இகழ்ந்தவர்
எள்ளுணவு - இகழும் உணவு
எறிந்து - கலைத்து, விழுந்து, வெட்டி, அழித்து
எறிபுனம் - தினையறுத்த புனம்
எறிய - சிந்துமாறு
எறியும் - முழக்குகின்ற
எறுழ் - வலிமை

மேல்

அகர வரிசை