ஐங்கணைக்
கிழவன் |
- |
தாமரை,
மா, முல்லை, அசோகு, நீலோற்பலம்,
ஆகிய ஐந்து பூவையும் தனக்கு அம்பாகக்
கொண்ட மன்மதன் |
ஐது |
- |
அழகு |
ஐந்தரு
|
- |
வானுலகிலுள்ள
கற்பகம், அரி சந்தனம்,
பாரிசாதம், மந்தாரம், சந்தானம், என்ற ஐந்து
மரங்கள் |
ஐந்தருக்
கடவுள் |
- |
இந்திரன்
|
ஐந்திணை
|
- |
குறிஞ்சி,
பாலை, முல்லை, மருதம், நெய்தல்
ஆகிய ஐவகை நிலப் பகுப்பு |
ஐந்தினில்
|
- |
தென்புலத்தார்,
தெய்வம், விருந்து, ஒக்கல்,
தான், என்னும் ஐந்திடங்களில் |
ஐந்து
அடுக்கிய
ஆறு ஐந்நூறு |
- |
ஐந்தால்
பெருக்கிய மூவாயிரம், அதாவது
பதினையாயிரம் |
ஐந்து
அமர்
கதுப்பு |
- |
கொண்டை,
குழல், பனிச்சை, முடி, சுருள்,
என்ற ஐவகைப் பகுப்பாகிய கூந்தல் |
ஐந்தொழில்
|
- |
படைத்தல்,
காத்தல், அழித்தல், மறைத்தல்,
அருளல் |
ஐம்பகை
|
- |
சுவை,
ஒளி, ஊறு, ஓசை, நாற்றம், என்னும்
ஐம்புலன்கள் தீய வழியில் செலுவதாலாகிய
பகை |
ஐம்பதிற்று
இரட்டி
ஆறுடன் கழித்த |
- |
தொண்ணூற்று
நான்கு |
ஐம்பது
நூறு |
- |
ஐயாயிரம்
|
ஐம்பால்
குழல் |
- |
ஐந்து
பகுப்பாகிய மயிர் முடி (கொண்டை,
குழல், பனிச்சை, முடி, சுருள்) |
ஐயர்
|
- |
அந்தணர்
|
ஐயவி
|
- |
வெண்சிறுகடுகு
|
ஐவர்
|
- |
தருமன்,
வீமன், அர்ச்சுனன், நகுலன்,
சகாதேவன், என்பவர்கள் |
ஐவாய்
|
- |
பாம்பு
|
|