முகப்பு

தொடக்கம்


கொக்கரை  - வலம்புரிச் சங்கில் ஒரு வகை வாத்தியம்
கொக்கு - மா மரம்
கொங்கு - தேன்
கொட்டை - பொகுட்டு, தாமரைக் கொட்டை
கொட்ப - அலைய, சுழல
கொட்பு - சுற்றுதல், சுழற்சி
கொடி - காக்கை
கொடிக்காய் - கொடியில் காய்க்குங் காய் (சுரைக்காய்)
கொடிச்சியர் - குறத்தியர்
கொடிஞ்சி - தேரின் கைப் பிடி
கொடுமரம் - வில், வளைமரம், ஏணிப்பழு
கொண்டல் - கீழ் காற்று
கொண்டோன் - கணவன்
கொண்மூ - மேகம்
கொப்புள் - கொப்புளம்
கொம்பினர் - பூங்கொம்பு போன்ற மகளிர்
கொய்யுளை - மட்டம் செய்த பிடரிமயிர்
கொல்லிக் கிரி - கொல்லி மலை
கொல்லை - தினைப் புனம்
கொழித்தல் - ஒதுக்குதல்
கொழுஞ்சுடர் - அனற் பிழம்பு போன்ற செம்மேனியை உடைய
  சிவபெருமான்
கொழுதி - கோதி
கொழுமுனை - கலப்பையின் கொழு நுனி
கொள்ள - (உலகு முழுதும்) பரவ
கொள்ளம் - குழை சேறு
கொள்ளை - களவு; மிகுதி, திரட்சி
கொள்ளைமுகம் - பலமுகம்
கொளுவ - பற்ற, கொள்ளச் செய்ய
கொளுவுதல் - பூட்டுதல், சேர்த்தல், பொருத்துதல்,
  தூண்டிவிடுதல்
கொற்றாள் - கல் மண்களில் வேலை செய்யும் ஆள்
கொறிப்ப - கொறித்தலால், சிறிது சிறிதாகப் பொறுக்கி
  உண்ணுதலால்

மேல்

அகர வரிசை