முகப்பு

தொடக்கம்


சகடம் - வண்டியின் உருளை
சகடு - வண்டி
சகோரம் - சகோரப் பறவை
சங்கம் - சங்கு
சட்டகம் - உடல்
சந்தம் - வேதத்தை ஓதும் இசை
சந்து - சந்தன மரம்
சமயக்
கணக்கர்
- சமய வாதிகள்
சயமகள் - வெற்றித் திரு (விஜய லக்ஷ்மி)
சயிலம் - மலை
சரண் - திருவடி
சரம் - அம்பு
சரவணம் - நாணல்; சரவணப் பொய்கை
சருக்கம் - நூற் பிரிவு; வேதம் சொல்லும் முறைகளுள் ஒன்று
சருமம் - தோல்
சல்லரி - ஒரு வகை வாத்தியம், ஒரு வகைப் பறை
சலஞ்சலம் - சலஞ்சலம் என்னும் சங்கு: அதாவது வலம்புரி
  ஆயிரம் சூழ்ந்த சங்கு
சலபதி - வருணன்
சலியா - அசையாத
சவரர் - வேடர்
சனனப் பீழை - பிறவித் துன்பம்

மேல்

அகர வரிசை