முகப்பு

தொடக்கம்


 துகள் - பொடி
 துகளம் - நுட்பமான ஒலி
 துகிர் - பவழம்
 துகிர்ப் பாவை - பவழப் பாவை
 துகில் - ஆடை
 துஞ்சல் - கெடுதல்
 துஞ்சிய - அடங்கிய
 துடி - உடுக்கை, பம்பை, துடிப்பறை (குறிஞ்சி நிலப்
  பறை)
 துடுமென - விரைவாக
 துணர் - கொத்து, பூங் கொத்து
 துணித்தல் - வெட்டுதல், துண்டு படச் செய்தல்
 துணை - மனைவி, இரண்டு
 துணை விளக்கு - இரட்டை விளக்கு
 துத்தம் - ஏழிசையில் ஒன்று
 துத்திரி - ஒரு வாத்தியம்
 துதைந்த - நெருங்கிய
 தும்பி - வண்டு
 தும்புரு கருவி - ஒரு வகை யாழ், தும்புரு என்னும் வீணை
 துய்த்து - நுகர்ந்து, தின்று, உண்டு
 துயில் - உறக்கம்
 துரக்கும் - ஓட்டும், போக்கும்
 துரந்து - செலுத்தி, தொடர்ந்து சென்று
 துருத்தி - நீரை முகந்து வீசும் கருவி
 துலங்கிய - தெளிந்த
 துவக்கி - இழுத்துக் கட்டி
 துவசம் - கொடி
 துவரத் தீர்ந்த - முற்றத் துறந்த
 துவட்டும் - துடைக்கும்
 துவைத்தல் - ஒலித்தல், முழங்குதல்
 துழனி - ஒலி
 துள்ளல் - எடுத்தல் ஓசை
 துள்ளிய ஞான்று - ஆடிய பொழுது
 துள்ளும் - ஒலிக்கும்
 துற்றுதல் - நெருக்குதல்
 துறக்கம் - சுவர்க்கம், வீட்டுலகம்
 துறக்குக - நீங்குக
 துறை ஆடுதல் - நீராடுதல்
 துன்றிய - நெருங்கிய
 துனைவு - விரைவு

மேல்

அகர வரிசை