முகப்பு

தொடக்கம்


பூ - பூமி, மலர்
பூசல் துடி - போர்க்குரிய பம்பை
பூட்சி - அணிகலன்; பூணப் பெறுவன
பூண் - அணிகலன்
பூணை - அலங்காரமுடையை ஆயினை
பூத்தல் - தோன்றுதல், மலர்தல், அணிதல்
பூதம் ஐந்து - நிலம், நீர், தீ, வளி, வான்
பூம் புனம் - பொலிவுள்ள தினைப் புனம்
பூவிலைத் தொழில் மகன் - பூ விற்போன்
பூவை - நாகண வாய்ப்புள்
பூழி - புழுதி
பூழிப் போனகம் - மணற் சோறு

 

அகர வரிசை