முகப்பு

தொடக்கம்


மா - கருமை, பெருமை, மா மரம், விலங்கு
மா அடி - விலங்குகளின் அடிச் சுவடு
மா அறம் - பெரிய தருமம்
மாக் கடிப்பு - வலிமிக்க குறுந் தடி
மாக் குயில் - கருங் குயில்
மாசு - குற்றம்
மாசுணம் - பாம்பு
மாண்டு - மாட்சிமைப் பட்டு
மாதவர் - பெருந்தவமுடையவர் (பதஞ்சலி)
மாதவன் - திருமால்
மாதிரக் களிறு - திக்கு யானை
மாதிரம் - திசை
மாது - அழகு
மாதுலன் - மாமன்
மாந்தல் - உண்ணல், தின்றல்
மாந்தர் - மக்கள்
மாமுனி - பெரிய முனிவன் (காசியபன்)
மாமை - பசலை
மாய்க்க - கொல்ல
மாயாது - வாடாது
மால் - மயக்கம்
மாலை - ஒழுங்கு
மாவுடைக் கூற்றம் - சூரபதுமனுக்கு எமன் (முருகன்)
மாழ்குதல் - மனம் வாடுதல், வருந்துதல், மயங்குதல்
மாறிக் குனித்த - கால் மாறி ஆடிய
மானக் கலன் - சிறந்த அணி, ஆபரணம்

மேல்

அகர வரிசை