முகப்பு தொடக்கம்



கணபதி துணை

கபிலர் வரலாறு

உக்கிரப் பெருவழுதியார் காலத்திலே சோழியப் பிராமணராகிய தெய்வத்தன்மைபொருந்திய பகவனென்பவராலே மனைவியாக ஏற்றக்கொள்ளப்பட்டவளாகிய கருவூர் ஆதியென்பவள், அவருக்குச் செய்த உடம்படிக்கை வழுவாதிருக்கும் படி அவருக்குத் தானீன்ற பெண்பானால்வர் ஆண்பான் மூவராகிய உப்பை, ஒளவை, உறுவை, வள்ளி, அதிகமான், திருவள்ளுவர், கபிலர் எனப்படுகின்ற ஏழு பிள்ளைகளையும் அததுபிறந்த விடங்களிலே வைத்துவிட்டுச் சென்றாளாதலின் அப்போது அவ்வெழுவரிலே கடைப்பிள்ளையானது சோழநாட்டிலே திருவாரூரென்னும் பரிசுத்த சிவஸ்தலத்திலே ஈன்று வைக்கப்பட்டது. அவ்வூர் வேதியருள் சந்ததியின்றி வருந்தியிருந்த ஒருவர் அழகும் உருவும் அமைந்து விளங்காநின்ற அப்பிள்ளையைக் கண்டு தனியிடத்துப் பொற்குடத்தைக் கண்ட வறியவன்


முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்