கள்ளவாரணப் பிள்ளையார் காப்பு

  தாரமர் கொன்றையும் சண்பக
     மாலையும் சாத்தும்தில்லை
ஊரர்தம் பாகத்து உமைமைந்த
     னேஉல(கு) ஏழும்பெற்ற
சீரபி ராமிஅந் தாதிஎப்
     போதும்என் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதி
     யேநிற்கக் கட்டுரையே.