முகப்பு
நூல் பயன்
ஆத்தாளை எங்கள் அபிராம
வல்லியை அண்டம்எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூநிறத்
தாளைப் புவிஅடங்கக்
காத்தாளை ஐங்கணை பாசாங்
குசமும் கரும்பும்அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழு
வார்க்(கு)ஒரு தீங்கில்லையே.