பாதகந்தரு
துன்பொழி வகை.
கட்டளைக்
கலித்துறை.
சுகந்தரு
கச்சிப் பதிவந் தடியர் துயர்களைவோர்
நகந்தரு மெல்லியற்
காம விழியிரு நாழிநெல்லால்
உகந்தரு முப்பத்
திரண்டறம் ஓம்பச்செய் உத்தமர்பா
தகந்தரு துன்பொழிப்
பார்பணி வீரவர் தாண்மலரே. (8) |
(இ-ள்.)
சுகம் தரு - இன்பத்தைத் தருகின்ற, கச்சிப் பதி வந்து - திருக்கச்சிப் பதியில்
எழுந்தருளி, அடியர் துயர்களைவோர் - அடியார் துக்கங்களை ஒழிப்பவரும், நகம் தரு மெல்லியல்
காம விழி - மலையரையன் பெற்ற மகளாகிய மேன்மையான சாயலையுடைய காமாட்சி, இருநாழி
நெல்லால் - இரண்டு படி நெல்லாலே, உகந்து - மகிழ்ந்து உயர்ந்து, அரு - அரிய, முப்பத்து
இரண்டு அறம் ஓம்ப - முப்பத்திரண்டு அறங்களையும் செய்யும்படி, செய் உத்தமர் - செய்த
உத்தமரும், பாதகந் தரு - தாம் அடியார்க்குப் பாதகத்தைத் தருகின்ற, துன்பு ஒழிப்பார்
- துன்பத்தை ஒழிப்பவருமாகிய, அவர் தாள்மலர் - அந்த ஏகாம்பர நாதரின் திருவடித்
தாமரையை, பணிவீர் - வணங்குவீர் (எ-று.)
காமக்
கண்ணியார் வேளாளர்க்கு இருநாழி நெல்லைக் கொடுத்து அதைக் கொண்டு நெல்லைப் பெருக்கி
உலகில் 32-அறம் செய்யும்படி உதவினர்.
பாதகம் தரு துன்பு (துன்பம்) ஒழிப்பார்;
அவர் தாள் மலரே பணிவீர் என இயைக்க.
நகம் - போகாதது என்ற காரணப்
பொருளுடைய மலை.
(உகப்பு
- தொல் - சொல். உரி, 3) உகந்து, உவந்து என்னும் பொருட்டு. |