| 
 நிமல 
 வாழ்வினைப் புகழ்ந்தடைதல் அறுசீர் 
 ஆசிரிய விருத்தம் 
 
 | மலர்க்கஞ்சன் 
 சிரமிழந்தான்; கோப்புரக்கமலையெடுத்தான், 
 வன்றி யானான்;
 சிலைக்கரும்பன் 
 உருவழிந்தான; சேணியங்கும்
 இருகதிருஞ் 
 சிதைந்து நொந்த;
 கலக்கரிய 
 பகைப்புரங்கள் நீறுபட்ட
 கச்சியே கம்பர் மேன்மை
 நிலைப்படவா 
 யாமையினன் றோமனமே
 புகழ்ந்தடைதி நிமல வாழ்வே.                     (9)
 |  (இ-ள்.) 
 மலர்க்கஞ்சன் - தாமரை மலரில் இருப்பவனாகிய பிரமன், சிரம் இழந்தான் - ஐந்து தலைகளில் (நடுத்) தலையை இழந்தான், கோ புரக்க - பசுக்களைப் 
 பாதுகாக்க, மலையெடுத்தான் - கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்த திருமால், வன்றியானான் - பன்றி ஆனான், சிலைக் கரும்பன் - கருப்பு (கரும்பு) 
 வில்லினையுடைய மன்மதன், உருஅழிந்தான் - தன் வடிவு அழிந்தான். சேண் இயங்கும் - ஆகாயத்தில் சஞ்சரிக்கும், இரு கதிரும் - ஞாயிறுந் திங்களும், 
 சிதைந்து - (தக்கனுடைய வேள்வியில்) அழிந்து, நொந்த - நொந்தன, கலக்கு அரிய - கலங்குத லில்லாத, பகைப் புரங்கள் - பகைவர்களுடைய முப்புரங்கள், 
 நீறுபட்டன - அழிந்தன, கச்சி ஏகம்பர் மேன்மை - திருக்கச்சியில் எழுந்தருளிய ஏகாம்பரநாதரது மேன்மையானது, நிலைப்பட - நிலையாக, வாயாமையின் 
 அன்றோ - கிடைக்காமையினாலன்றோ (ஆகையால்) மனமே - மனமே, புகழ்ந்து - அவரைப் புகழ்ந்து, நிமல வாழ்வு - அழுக்கில்லாத் தூய வாழ்வை, அடைதி - 
 அடைவாய். மலர்க் கஞ்சன் - கஞ்சமலரன் என விகுதி பிரித்துக் கூட்டுக.  கஞ்சம் - நீரில் தோன்றுவது எனக் காரணப் பெயர். சிலைக் கரும்பன் - 
 கரும்புச் சிலையன் என விகுதி பிரித்துக் கூட்டுக. ஏகம்பர் மேன்மை நிலையாகக் கிடைக்காமையினாலன்றோ பிரமன் முதலாயினோர் இவ்வாறாயினர்.  ஆகையால் மனமே 
 அவனைப் புகழ்ந்து நிமல வாழ்வை அடைதி. நொந்த, நீறுபட்ட - அன் சாரியையின்றி வந்த வினைமுற்றுக்கள். நிலைப்பட - நிலையாக, வாயாமையின் - கிடைக்காமையினால். கலக்கு என்பது கலங்கு என்பதன் வலித்தல் விகாரம். |