| 
 அறுசீர் 
 ஆசிரிய விருத்தம் 
 
 | வெளிவீட் 
 டாரைக் காட்டாரைவியன்மா வாரைச் சேவாரை
 ஒளிவிட் 
 டோங்குங் கச்சியரை
 உயர்மா மறையின் உச்சியரைக்
 களியுற் 
 றாடுங் கூத்தாரை
 அகிலம் அனைத்துங் காத்தாரை
 அளியுற் 
 றினிது புணர்ந்திடுதற்
 கநங்கன் செயலொன் 
 றிலைமானே.       (19)
 |  (இ-ள்) 
 வெளி வீட்டாரை - சிதாகாச முடையவரும், காட்டாரை - திருவாலங்காட்டில் ஆடுபவரும், வியன்மாவாரை - பெருமை வாய்ந்த மாமரத்தின் அடியில் வீற்றிருப்பவரும், 
 சேவாரை - இடபவாகனத்தை உடையவரும், ஒளி விட்டு ஓங்கும் - ஒளிப்பிழம்பாய் உயர்ந்து எழும், கச்சியரை - காஞ்சிபுரத்தை உடையவரும், உயர்மாமறையின் - 
 மிகச் சிறந்த வேதத்தின், உச்சியரை - உச்சியில் உள்ளவரும், களியுற்று ஆடும் - மகிழ்ச்சியுற்று ஆடுகின்ற, கூத்தரை - கூத்தை உடையவரும், அகிலம் 
 அனைத்தும் - உலகம் முழுதும், காத்தாரை - காத்தவருமாகிய ஏகாம்பரநாதரை, அளியுற்று - அன்புற்று, இனிது புணர்ந்திடுதற்கு - இனிதாய்ச் சேர்ந்திடுதற்கு, 
 அநங்கன் செயல் - மன்மதனது செய்கை. மானே - தோழியே, ஒன்றிலை - அவரிடத்தில் சிறிதும் இல்லை. மா - மாமரம், சே - எருது, அநங்கன் - அங்கமில்லாதான் (உருவிலான் - மன்மதன்) மன்மதன் கச்சிப்பதியாருக்கு 
 இச்சை உண்டாக்கவில்லை.  ஆதலின், அச்சிவபிரான் என்னை விரும்பவில்லை.  தோழியைப் பார்த்துத் தலைவி கூறியது. மான் - மான்போன்றவளாகிய தோழி - 
 உவமை யாகுபெயர். |