| 
 கட்டளைக் 
 கலித்துறை 
 
 | இசையா 
 ரணத்தின் முடியார் திருக்கச்சி யீசரன்பிற்பசையா 
 ரணங்கொரு பங்குடை யாரரி பங்கயத்தன்
 மிசையா 
 ரணங்கொழித் தோருள மேவிய மெய்யருத்தி
 நசையா 
 ரணங்குறு நானவர் நற்பத நாடுவதே.                   (26)
 |  (இ-ள்.) 
 இசை ஆரணத்தின் முடியார் - இசையுடன் ஓதப்பெறும் வேதத்தின் உச்சியில் விளங்குபவர், 
 திருக் கச்சி ஈசர் - அழகிய காஞ்சிபுரத்தில் எழுந்தருளிய ஏகாம்பரநாதர், அன்பின் 
 பசையார் - அன்பு என்னும் செல்வத்தை உடையார், அணங்கு ஒரு பங்குடையார் - உமாதேவியை 
 ஒரு பாகத்தில் உடையவர், அரி பங்கயத்தன் மிசையார் - திருமால், பிரமன் ஆகிய இருவருக்கும் 
 மேற்பட்டவர், அணங்கு ஒழித்தோர் உளம் - உலக ஆசையை ஒழித்தோரது உள்ளத்தில், 
 மேவிய - பொருந்திய, மெய் அருத்தி - உண்மையான அன்பில், நசையார் - விருப்பங்கொண்டவர், 
 அணங்கு உறு நான் - துன்பத்தையுற்ற யான், அவர் நற் பதம் - அக்கச்சி ஈசர்தம் திருவடியை, 
 நாடுவதே - நாடுதலே யாகும். (வி. உ.) 
 பசை - பற்று. உளம் மேவிய மெய்யருத்தி நசையார் - உள்ளத்தில் பொருந்திய பொருளமைந்த 
 நடனத்தில் விருப்பங் கொண்டவர். அருத்தி - கூத்து: மன்றுளாட்டு (உள்ளத்தில் உணர்வொடு 
 மறை ஓதுங்காலை நிகழும் நடனம்) எனினும் அமையும். |