| நேரிசைச் 
 சிந்தியல் வெண்பா
 
 | மாவுடையான் 
 வெள்ளி மலையுடையான் எண்டிசையாம்தூவுடையான் 
 நால்வேதச் சொல்லுடையான் - தாவிலறச்
 சேவுடையான் 
 எங்கள் குலத் தே.                        (48)
 |     (இ-ள்.) 
 மா வுடையான் - மாமரத்தின் நிழலை இருப்பிடமாக உடையவன், வெள்ளி மலையுடையான் - 
 கயிலைமலையை இருப்பிடமாக உடையவன், எண் திசையாம் - எட்டுத் திக்குகளாகிய, தூ உடையான் 
 - தூய உடையை உடையவன், நால்வேதச் சொல்லுடையான் - நான்கு மறைகளாகிய சொற்களை 
 உடையவன், தா இல் அறம் சேவுடையான் - கெடுதலில்லாத தரும விடையை உடையவன், (யாவனெனில்), 
 எங்கள் குலம் தே - எங்கள் குலத் தெய்வம். தூய்மை உடை - தூ உடை; உடை - ஆடை. மாவுடையான், மலையுடையான், தூவுடையான், சொல்லுடையான், 
 சேவுடையான் என ஒரு பொருள்மேல் பல பெயர் வந்தடுக்கித் ‘தே’ என ஒரு 
 பெயர்கொண்டு முடிந்தன. “தாவே வருத்தமும் கேடும் ஆகும்” என்பது (தொல்காப்பியம், உரியியல்.) |