இன்னிசை
வெண்பா
இன்படைய
வேண்டின் இகலற்க - வன்பிறவித்
துன்பொழிய
வேண்டினவந் துன்னற்க - அன்புருவாம்
போதனருள் வேண்டுமெனிற்
பொய்யற்க - சூதகலச்
சூதநிழ லான்கழலைச்
சூழ். (69) |
(இ - ள்.)
இன்பு அடைய வேண்டின்-இன்பத்தை அடைய விரும்பினால், இகலற்க - பிறரிடத்து மாறுபாடு
கொள்ளற்க, வன் பிறவித் துன்பு - நீக்குதற்கரிய வலிமையையுடைய பிறப்பின் துன்பம்,
ஒழிய வேண்டின் - ஒழிய விரும்பினால், அவம் துன்னற்க - (வீட்டு நெறிக்குக் கேடுதரும்)
பாவச்செயலைச் செய்யற்க, அன்பு உருவாம் - அன்பே வடிவமாகிய, போதன் - மெய்யறிவுருவனாஞ்
சிவபிரானது, அருள் வேண்டு மெனில் - அருள் வேண்டுமே ஆனால், பொய்யற்க - பொய் பேசாது
ஒழிக, சூது அகல - வஞ்சகம் நீங்க, சூதம் நிழலான் - மாமரத்தின் நிழலில் வீற்றிருக்கும்
ஏகாம்பரநாதரது, கழலை - கழலணிந்த திருவடியை, சூழ் - எண்ணுக.
அன்புருவாம் போதன் - அன்பே வடிவாகிய (மெய்யுணர்ந்
தோரால்) தெளியப்படுபவன். (போதம் - தெளிதல்.)
நெஞ்சு - முன்னிலை எச்சம்.
‘சூழ்க’ என்பது ‘சூழ்’ என விகாரமாயிற்று.
இகலென்ப எல்......பகலென்னும் பண்பின்மை பாரிக்கும்
நோய் ஆதலால் ‘இகலற்க’ என்றார்.
கழல், தானியாகுபெயராய்த் திருவடிகளை யுணர்த்தி நின்றது. வியங்கோளெல்லாம் வேண்டிக்கோடற்பொருளில்
வந்தன; விதித்தற்பொருளில் வந்தனவெனவும் கொள்ளுப. |