| 
 கட்டளைக் 
 கலிப்பா  
  
 
 | சட்டப் 
 பட்டவு ளம்பெற்ற சால்பினோர்தங்கப் பெற்றகச் சிப்பதிச் 
 செல்வவேள்
 குட்டப் பட்ட தலைவிதி யென்றலை
 கொடுமை கூரெழுத் திட்டனன் 
 மாதர்வார்
 கட்டப் பட்டத னம்பிறை வாணுதல்
 கடுவ டங்கிய கண்ணின்ம 
 மயங்குவேற்
 கிட்டப் பட்டமட் டின்பமும் வாய்க்குமோ
 ஈச னேயரு ணேசவி லாசனே.                     
 (79)
 |  (இ - ள்.)  
 சட்டம் பட்ட - செப்பம் அமைந்த, உளம் பெற்ற - மனம் அமைந்ததால், சால்பினோர் 
 - நிறைவு உற்ற பெரியோர், தங்கப் பெற்ற - வசிக்கப் பெற்ற; கச்சிப்பதி காஞ்சிபுரத்தில் 
 குமரக் கோட்டத்தில் எழுந்தருளிய, செல்வ வேள் - சிறப்புடைய முருகனாரால், குட்டப்பட்ட 
 - குட்டுண்ட, தலை விதி - தலையை உடைய பிரமன், என் தலை - என் தலையில், கொடுமை 
 கூர் எழுத் திட்டனன் - கொடுமை மிக்க எழுத்தை எழுதினான், (அதனால்), மாதர் வார் 
 கட்டப்பட்ட தனம் - பெண்களுடைய கச்சால் கட்டப்பட்ட முலைகளிலும், பிறை வாள் நுதல் 
 - எட்டாம் நாள் பிறை போன்ற ஒளி பொருந்திய நெற்றியினிடத்தும், கடு அடங்கிய 
 கண்ணின் - நஞ்சு தங்கிய கண்களிடத்தும், மயங்கு வேற்கு - மனத்தைச் செலுத்தி மயங்குவேனாகிய 
 எனக்கு, இட்டப் பட்ட மட்டு - விரும்பப்பட்ட அளவாக, இன்பமும் - அந்தப் பேரின்பமும், 
 வாய்க்குமோ - கைகூடுமோ (கூடாதன்றே), ஈசனே - கடவுளே, அருள் நேச விலாசனே - அருளை 
 உடைய நேசத்தால் அன்பரிடத்து இன்ப விளையாட்டுப் புரிபவனே அப் பேரின்பம் கிடைக்குமாறு நீ அருள் 
 செய்வாயானால் தலைவிதிக்கு மாறாக நான் அடைவது கூடிடும். இன்பமும் உயர்வு சிறப்பு. வாய்க்குமோ - ஓ எதிர்மறை வினாவோடு ஐயம்.  இனி, 
 ஈசனே! நேச விலாசனே! அருள் அருள்வாய் எனவுமாம். |