|   நெஞ்சொடு 
 கிளத்தல் கட்டளைக் 
 கலித்துறை  
  
 
 | போற்றப்பல் பாவுண்டு கேட்கச் செவியுண்டு 
 பூப்பறித்துத்தூற்றக் கரமுண்டு தாழச் சிரமுண்டு தோத்திரங்கள்
 ஆற்றச்செந் நாவுண்டு தென்கச்சி வாணருண் டல்லலெலா
 மாற்ற அருளுண்டு நெஞ்சே! துயரெவன் மற்றெனக்கே.          
 (85)
 |  (இ - ள்.) போற்றப் 
 பல் பாவுண்டு-துதிக்கப் பல பாக்களும் பாவினங்களும் உண்டு, கேட்கச் செவியுண்டு - அவற்றைக் 
 கேட்கக் காதுண்டு, பூப் பறித்து - பூக்களைக் கொய்து, தூற்ற - தூவ, கர முண்டு - கை 
 யுண்டு, தாழச் சிரமுண்டு - (அவரை) வணங்கத் தலையுண்டு, தோத்திரங்கள் ஆற்றச் செந் 
 நாவுண்டு - தோத்திரங்கள் செய்யச் சிவந்த நாவுண்டு, (இவற்றை ஏற்றுக்கொள்ள), தென் 
 கச்சி வாண ருண்டு - தெற்குத் திசையிலுள்ள காஞ்சியம் பதியில் கோயில்கொண்டு வாழ்வாராகிய ஏகாம்பரநாதருண்டு, 
 அல்லல் எல்லாம் மாற்ற அருளுண்டு - நமக்கு உண்டான துன்பங்களை எல்லாம் ஒழிக்க அவரது 
 கருணையுண்டு, நெஞ்சே - (ஆதலால்) மனமே!,எனக்கு-, துய ரெவன் - துக்கம் ஏது? இக்கருத்துப்பற்றியே,  
  
 
 | “நாவுண்டு நெஞ்சுண்டு நற்றமி ழுண்டு 
 நயந்தசிலபாவுண் டினங்கள் பலவுமுண் டேபங்கிற் கொண்டிருந்தோர்
 தேவுண் டுவக்குங் கடம்பா டவிப்பசுந் தேனின்பைந்தாட்
 பூவுண்டு நாரொன் றிலையாந் தொடுத்துப் புனைவதற்கே.”
 |  இது நெஞ்சொடு கிளத்தல். ‘வாணர்’ என்பது, ‘வாழ்நர்’ என்பதன் மரூஉ. எவன் என் வினா ஈண்டு இன்மை குறித்துநின்றது. |