உ
ஸ்ரீ பிரகதீஸ்வரர் துணை.
முகவுரை. _ _ _ _
தனியரெத்
தனையொ ராயிர வருமாந்
தன்மய ரென்வயத் தினராங்
கனியரத் தருதீங் கரும்பர்வெண் புரிநூற்
கட்டிய ரட்டவா ரமிர்தர்
புனிதர்பொற் கழலர் புரிசடா மகுடர்
புண்ணியர் யொய்யிலா மெய்யர்க்
கினியரெத் தனையு மிஞ்சிசூழ் தஞ்சை
யிராசரா சேச்சரத் திவர்க்கே
செந்தமிழ் மொழியில் வழங்கிவரும் தொண்ணூற்றாறு நூல் வகைக்குள் குறவஞ்சியும் ஒன்றாகும். குறவஞ்சி குறத்திப் பாட்டெனவும், குறவஞ்சி நாடகம் எனவும் வழங்கும். குறவஞ்சி என்ப தலைவன் பவனி வருதல், மகளிர் காமுறுதல், மோகினி வரவு, உலாப் போந்த தலைவனைக் கண்டு மயங்கல், திங்கள் தென்றல் முதலியவற்றைப் பழித்தல், பாங்கியுற்றது என்னை வினவுதல், தலைவி பாங்கியோடுற்றது கூறல், பாங்கி தலைவனைப் பழித்துக்கூறல், தலைவி தலைவனைப்புகழ்ந்து கூறல், தலைவி பாங்கியைத் தூது வேண்டல், தலைவி பாங்கியோடு தலைவனடையாளங் கூறல், குறத்தி வரவு, தலைவி குறத்திய மலைவள முதலிய வினவல், குறத்தி மலைவளம் நாட்டுவளம் முதலிய கூறல், தலைவன் ஊர் சுற்றம் முதலிய வளங்கள் கூறல், குறிசொல்லி வந்தமை கூறல், தலைவி குறிகேட்டல், குறத்தி தெய்வம் வேண்டுதல், குறிதேர்ந்த நல்வரவு கூறல் தலைவி பரிசிலுதவி விடுத்தல், குறவன் வரவு, பறவை வரவு பகர்தல், கண்ணி குத்தல், பறவை படுத்தல்,
குறத்தியைக் காமுற்றுத் தேடல், குறவன் |