(இதன்பொருள்.)
பூமேவு புல்லைப் பொருந்து குமரேசர் மேல்
-
புவியிலே சிறப்புற்ற திருப்புல்வயலில் எழுந்தருளிய குமரக் கடவுள்பால்,
தேமேவிய சதகம் செப்ப - இனிமை பொருந்திய சதகத்தைக் கூற,
கோமேவிக் காக்கும் சரவணத்தான் - தலைமையாக இருந்து காப்பாற்றும்
சரவணத்திலே தோன்றிய முருகனும், கம்பம் - (அடியவருடைய
அன்பாகிய) கட்டுத்தறியிலே பிணிப்புண்ட, கும்பத்து ஐந்துகரம் கா
குஞ்சரவணத்தான் - குடம் போன்ற மத்தகத்தினையும் ஐந்து
திருக்கைகளையும் உடைய, காட்டில் உறையும் யானையின்
வடிவத்தையுடைய மூத்த பிள்ளையாரும், காப்பு - காவலாகும்.
(விளக்கவுரை.)
புல்லை-திருப்புல்
வயல் (மரூஉ). ஒரு சொல்
தன் வடிவம் திரிந்து மருவி வருவது மரூஉ. மருவுதல் - பல நாள்
பழகி வருதல். சென்னைப்பட்டினம் என்பது சென்னை எனவும்,
கோயம்புத்தூர் கோவையெனவும், பூவிருந்தவல்லி பூவையெனவும்
வருவனவும் மரூஉ ஆகும்.
(கருத்து)குமரேச சதகத்தினைப் பாடுதற்கு மூத்த பிள்ளையாரும்
(விநாயகரும்) முருகனும் அருள் புரிவார்கள்.
(வடசொல்)
குமரன் - இளையோன், ஈசன் - தலைவன், சர
வணம் - நாணல். கரம்-கை. குஞ்சரம் - யானை,
வணம் (வர்ணம்) - வடிவு (அழகு). |