அவை அடக்கம்
 

 

ஆண்டவர் தந்த சங்கத் தமர்ந்தவர்க் கடங்காக் கீர்த்திப்
பாண்டிமண் டலத்தைத் தானே பாடுவேன் பாவை பங்கர்
தாண்டவ மாடு வார்முன் பேயாடித் தடுப்ப தேபோற்
பூண்டபே ரரவின் முன்னம் பூநாக மாடல் போலும்.    (3)