சிறப்புப்பாயிரம்-நூல் செய்தார்
 
  பழுதில் மதுரைப் பதிவீர பூபதி பாலனுயர்
வழுதி புரக்கின்ற தென்பாண்டி நாட்டினை வண்மைபெற
வுழுது தழைக்கின்ற வேளாளர் தம்மை யுயர்வரென
வெழுதும் பெருமான் புவிநல்ல தம்பியெங் காங்கேயனே. (4)
 
நூல் செய்தார்
 

 

வளங்கொ ளரிய நயினாந்தை யார்தொண்டை மண்டலத்தை
விளங்கும் வடமலை தென்காரைக் காட்டை மிகவுயர்த்தார்
நளம்பெறு மையம் பெருமாள்தென் பாண்டிநன் னாட்டினில்வந்
துளங்கொள வோங்கிய வேளாளர் தம்மை யுயர்த்தினனே. (5)