"தாறுமாறாய் மீசையிலஞ் சாறுமயிரும்--தூங்கற் சண்ணைக்கடாப் போல் நடையும் மொண்ணை முகமும் வேறுகீறி ஒட்ட வைத்த ஏறுகாதுமாய்--நேமி வீரனார்முக் கூடற் பண்ணைக் காரனார் வந்தார்" என்ற பாட்டு நகைப்புக்குச் சிறந்த எடுத்துக் காட்டாதல் காண்க. “எண்வகைச் சுவையே இலக்கியங்கள் கூறும்; சாந்தம் உலகியல் நெறினீங்கினோர்பாற் காணப்படுவது; “அது நெஞ்சாந்து எறியினும் செத்தினும் போழினும், நெஞ்சோர்ந்து ஓடா நிலைமைத் தாகும்” என்று கூறுவாரும் உளர். ஆனால், முக்கூடற் பள்ளு சாந்தத்தையும் கூறுகின்றது. ஒருத்தியை ஒருத்தி ஏசிக்கொண்டிருக்கும்போதே முக்கூடற் பள்ளி, இளைய பள்ளியைப் பார்த்து, "பெருமாள் அடியானுக்குப் பெண்டிருந்துமே--எங்கள் பெருமாளை நீபழித்துப் பேசலாமோடி" என்று கேட்க, இளைய பள்ளி, "திருமால் அடிமைஎன்றாய் சாலப்பசித்தால்--ஆருந் தின்னாததுண் டோசினத்தால் சொல்லாததுண்டோ" என்று கூற, மூத்தபள்ளி, "தீராண்மைநன் றாகச்சொன்னாய் மருதூர்ப்பள்ளி--போபோ சினத்தாலும் சீரழியச் சொல்ல லாமோடி" என்று கூற, இளையபள்ளி, "வாராதோஎ னக்குக் கோபம்முக் கூடற்பள்ளி--முந்த வைதவரை வாழ்த்தினவர் வையகத்துண் டோ" என்று கூற, மூத்தபள்ளி, |