முகப்பு தொடக்கம்

பிழம்புகளும் மறைந்த காலங்கள் ஐயமறத் தெரிகின்றன. இவர் ஆசிரியராகிய சிவஞான முனிவர் சிவத்தொடு கலந்த காலம் சாலிவாகன சகாப்தம் ஆயிரத் தெழுநூற்றெட்டு விசுவாவசுயாண்டுச் சித்திரைத் திங்கள் எட்டாம்நாள் திங்கட் கிழமை ஆயிலிய நாள் (கி பி - 1784) என்று கூறுப. இதனை, சிவஞானமுனிவர் திருவாய் மலர்ந்தருளிய "செங்கழுநீர்ப்பிள்ளையார்" பிள்ளைத்தமிழ் என்னும் நூலிற் பாயிரத்தில் வருஞ் செய்யுளாலறிக. அது வருமாறு :-

"இலகுசக னீரெட்டு நூற்று நாற்பத்தேழி
     னிற்கரங் கும்பமிருபத்
  தேழிரே வதிவெள்ளி பூர்வபக் கத்துதியை
     யேர்க்கவுல வுஞ்சுப்பிரம்
 கலவியுறு சுபதினங் கன்னிலக் கினமதிற்
     கலைசைப் பதிக்குள் வாழ்செங்
  கழுநீர் விநாயகர்த மீதுபிள் ளைத்தமிழ்க்
     கவிபாடி வானோ ருண
 அலைமலிகடற் கடைந் தமிழ்தூட்டு மாலென்ன
     வவனியிற் புலவர் செவியா
  லார்ந்திடத் துறைசைவாழ் சிவஞான தேசிக
     னரங்கேற்றி னானாதலால்
 நலசுகுண மணிகுவளை யணிபுயன் வீரப்ப
     னல்குமக ராசயோக
  னங்கள்கே சவபூப னனுசர்சேய் சுற்றமு
     நன்மைதரு வாழ்வுறுகவே"

என்பது.

இனி இத்தணிகைப் புராண ஆசிரியராகிய கச்சியப்பமுனிவர் சிவத்தொடு கலந்த காலம் சாலிவாகன சகாப்தம் ஆயிரத்தெழு நூற்றுப் பன்னிரண்டு சாதாரணயாண்டு, சித்திரைத் திங்கள் பதினொன்றாம்நாள், செவ்வாய்க்கிழமை புனர்பூசநாள் (கி. பி - 1788) என்று கூறுப. இதனை

"ஏர்தரு சாலி வாகன சகாத்தம்
       ஆயிரத் தெழுசதத் தொருபத்
     திரண்டின்மேற் சாதா ரணவரு டத்தில்
       இயைதகு சித்திரைத் திங்கள்
 சார்தரு தேதி பத்தினோ டொன்று
       தருசெவ்வாய் வாரம்பூருவத்தில்
     சத்தமி புனர்பூ சத்திரு நாளில்
       தவலறு கும்பலக் கினத்திற்
முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்