முன்னுரை
தெய்வப்புலவர்
சேக்கிழார் பெருமானார் யாத்த நூல் திருத்தொண்டர் புராணமாகும். இந்நூலைப் பெரிய புராணம் என்று
வழங்குவதே வழக்கத்தில் வந்துவிட்டது. இந்நூல் பல்லோரால் பலவகையில் அச்சாகி வெளிவந்துள்ளது.
சேக்கிழார் மாண்பையும், பெரிய புராணத்தின்
திட்ப நுட்பப் பொருட் சிறப்பையும் திரிசிரபுரம் மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
அவர்கள், தம் சேக்கிழார் பிள்ளைத் தமிழ்நூலில் திறம்படப் பாடி அமைத்துள்ளனர். இத்தகைய
அரிய நூலுக்கு, சைவத்திருவாளர் கயப்பாக்கம் சதாசிவ செட்டியார் அவர்கள், ஒரு குறிப்புரை எழுதியுள்ளனர்.
அதற்குப் பிறகு அண்மையில் விவேகானந்தர் கல்லூரித் தமி்ழ்ப் பேராசிரியர் வித்துவான் c.
ஜகந்நாதாச்சாரியார்
M.A.L.T. அவர்களும் __ பிள்ளைத்தமிழ்க்குக் குறிப்புரை எழுதியுள்ளனர்.
இக் குறிப்புரை முன்னைய குறிப்புரையினும் சிறிது விரிவுடையது.
பெரிய புராணத்தின் பெருமையினையும் சேக்கிழாரின்
சிறப்பையும் பற்றிப் பல அறிஞர்கள் உரைநடை வாயிலாகவும் உரைத்து உள்ளனர்.
இங்ஙனம் பற்பல பேரறிஞர்கள் பெரிய
புராணத்திற்கும், சேக்கிழார் பெருமானார்க்கும் அரிய பெரிய தொண்டினைச் செய்துள்ளனர். இந்நிலையில் அடியேனுக்கும்
நெடுநாளாகப் பெரிய புராணத்திற்கும் சேக்கிழார் பெருமானார்க்கும் என்னாலான தொண்டினைச் செய்ய
வேண்டும் என்ற அவா இருந்து வந்தது. அவ்வவாவினைச் சிறிது தணித்துக்கொள்ளப் பெரிய புராணத்தைத்
தழுவி “ வையம் போற்றும் வனிதையர் “ என்ற பெயரில் ஒரு நூலை உரை நடையில் எழுதி வெளியிட்டுள்ளனன்.
இதன்கண் வெறும் வனிதையர்களின் வரலாறுகளைமட்டும் எழுதப்பெறாமல், சேக்கிழார் பெருமானாரது கவிச்சிறப்பு,
நயம், அவரது |