விளக்கமும், சேக்கிழார் பிள்ளைத் தமிழ்
ஆசிரியரான திரு. பிள்ளை அவர்களின் வாழ்க்கை வரலாறும் இணைக்கப்பட்டுள்ளன. ஈற்றில், இந்நூலில்
கூறப்பட்டுள்ள விசேடச் செய்திகளைப்பற்றிய அகராதியும், எடுத்தாண்டுள்ள நூல்களின் பட்டியலும்,
மற்றும் பலவும் எழுதிச் சேர்த்திருப்பது, இவ்விளக்க உரையினை அவாவிப் படிப்போர்க்குப்
பொன் மலர் நாற்றம் உற்றால் போன்ற சிறப்பை அளிக்கும் என்பது எனது நம்பிக்கையான உள்ளக்
கிடக்கையாகும்.
இத்தகைய அரிய பெரிய தொண்டினைச் செய்தற்குரிய
அறிவையும் ஆற்றலையும் அளித்த நமது தெய்வப் புலவர் சேக்கிழார் பெருமானாரின் திருவடித் தாமரைகளை
உள்ளத்தில் கொண்டு வணங்கிப் போற்றுகின்றேன்.
இவ் உரைவிளக்கம், “ உரைப்போன்
உள்ளக் கருத்தின் அளவே பெருக்கம் “ என்பது போலப் பெரிதும் வளர்ந்து விட்டது. இவ்வளவு பெரிய
உரையினை அச்சிட்டு வெளியிடுவோர் யார் ? என்ற ஏக்கம் என் உள்ளத்தில் எழுந்தது. இதனைச்
சென்னை அறநிலைய ஆட்சித் துறைத் துணை ஆணையாளர் உயர்திருவாளர்
D. ராமலிங்க ரெட்டியார்
M.A.B.L.
அவர்களிடம் அறிவித்துக் கொண்டனன். அவர்கள் கருணை கூர்ந்து, தாம் ஒரு தேவத்தானம் மூலம்
வெளியிட ஏற்பாடு செய்வதாகக் கூறித் திருப்போரூர்க் கந்தப்பெருமான் தேவத்தானப் பரம்பரைத்
தர்மகர்த்தத்துவம் சிவத்திரு. சிவப்பிரகாச அடிகளார் அவர்களிடம் எனது உரைநூலைப்பற்றிக் கூறினார்கள்.
அவர்களும் உடனே உளம் உவந்து திருப்போரூர்த் தேவத்தான வெளியீடாக வெளியிட முன் வந்தனர்.
இவ்விருவர்கட்கு யான் யாது கைம்மாறு செய்யவல்லேன் ? எனது உளம் கலந்த நன்றி அறிதலான வணக்கத்தை
அறிவித்துக் கொள்வதே அன்றி வேறு அறியேன்.
இவ்வாறு இவ்வுரைநூலை எழுதியுள்ளேன் என்றும்,
இதனைத் திருப்போரூர்த் தேவத்தானம் வெளியிடமுன்வந்துளது என்றும் அறநிலைய ஆட்சித் துறை ஆணையாளர்
உயர் திருவாளர் எம். எஸ். சாரங்கபாணி முதலியார் B.A.B.L
|