| 
திருக்கயிலாய பரம்பரைப் பொம்மைய பாளையம் பெரியமடம், திருமயிலம் தேவத்தான ஆதீன பரம்பரைத் 
தர்மகர்த்தத்துவம் பதினெட்டாம் பட்டம். 
ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய 
சுவாமிகள் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் திருவடி வாழ்க.  “ எங்கும் நிறைந்த சிவபெருமான் குரு வடிவிலும் 
இலிங்க வடிவிலும் அடியார் வடிவிலும் வெளிப்படுவார்;  அம்மூன்று வடிவங்களையும் கடவுளாகவெ 
கொண்டு வழி பட்டால் முத்திப்பேறு அடையலாம் “  என்பது சாத்திரம், அம்மூன்று வடிவங்களையும் 
தனித் தனிப் பற்றுக் கோடாகக் கொண்டு வழிபட்டு முத்தியடைந்தவர்கள் சைவ நாயன்மார்களாவர். 
அந்நாயன்மார்களை வழிபட்டு அவர்களின் வரலாறுகளைப்  ‘பெரிய  புராணம் ‘ என்ற நூல் வாயிலாக 
உலகுக்கறிவித்து முத்தியடைந்தவர் ஸ்ரீ சேக்கிழார் பெருமானாவார். இன்று சைவம் நிலைத்திருக்கிறது 
என்றால் அஃது அப்பெருமானாராலேயாம். எங்கள் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகளைப்பற்றி ஸ்ரீ சிவப்பிரகாச 
சுவாமிகள், சொல்லும்போது,  “  அருந்தமிழ் நாடு ஒரு கோடி தவம் செய டவந்து அதிர் 
வெள்ளருவி தூங்கு உயர் மயிலை வரையின் அமர் விளக்கு “  என்றார். அப்படியே நாம்,  “ மேன்மை 
கொள் சைவம் செய்த தவப்பயனாகச் சேக்கிழார் அவதரித்தார் “  என்னலாம்.  ஸ்ரீ சேக்கிழாரைப்பற்றி முழுதும் உணர்ந்தவர் திருவாவடுதுறை யாதீன மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் 
பிள்ளையவர்கள். அப்பெருமானின் பெருமைகளெல்லாம் உலகுக்குத் தெரியும்படி  ‘சேக்கிழார் 
சுவாமிகள் பிள்ளைத்தமிழ் ‘ எனும் நூலைப் பாடினார்கள் ,  பிள்ளையவர்கள் தம் புலமை 
நலம் முழுமையும் காட்டிப் பாடிய அந்நூலின் பொருளைப்  புலமையுடையோரே அறிய முடியும். அதனால் 
அந்நூலுக்கு உரை வருவது வேண்டுவதே. அப்பணியினைச் செந்தமிழ்ச் செல்வரும், சைவ சமய சிரோமணியும் 
பேராசிரியருமான வித்துவான், பாலூர் - கண்ணப்ப
முதலியார் எம்.ஏ., |