திரு.
மா. சே. சாரங்கபாணி முதலியார் பி.ஏ.,பி.எல். அவர்கள்
ஆணையர், அறநிலைய
ஆட்சித்துறை, சென்னை.
தமிழிலுள்ள பலவகைச்
சிற்றிலக்கிய நூல்களுள் பிள்ளைத்தமிழ் என்பதும் ஒன்று. பிள்ளைத் தமிழ் நூல்கள் தமிழில்
மிகப் பல இருப்பினும், அவற்றுளெல்லாம் சேக்கிழார் பிள்ளைத் தமிழ் மிகவும் சிறப்புற்றுத் திகழ்கின்றது.
ஏனைய பிள்ளைத் தமிழ்
நூல்களெல்லாம் கடவுளர்மீதோ அரசர்கள்மீதோ, வள்ளல்கள்மீதோ கவிஞர்களால் பாடப் பெற்றனவாக இருக்கும். ஆனால், சேக்கிழார் பிள்ளைத் தமி்ழோ, ஒரு பெருங் கவிஞர். மற்றொரு
மாபெருங் கவிஞரைப்பற்றிப் பாடிய மாட்சிமை வாய்ந்தது.
திரிசிரபுரம் மகாவித்துவான்
மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களைத் தமிழுலகம் நன்கறியும். அண்மைக் காலத்திலே காப்பியம்
பாடவல்ல மாபெருங் கவிஞராக விளங்கிய சிறப்பு, அவர் ஒருவர்க்கேயுரியது. கோவை, உலா, அந்தாதி,
தூது, கலம்பகம், பிள்ளைத் தமிழ், புராணம் என்னும் பல வகைகளிலும், அப்பெருந்தகையார் பற்பல
நூல்களைப் பாடியருளியிருக்கின்றார். எனினும், அவற்றுளெல்லாம் தலை சிறந்து, அனைவரும்
விரும்பிப் பயிலும் வண்ணம் திகழ்வது, சேக்கிழார் பிள்ளைத் தமிழ் ஆகும்.
மகா வித்துவான்
மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள், திருவாவடுதுறை ஆதீனப் புலவராய்த் திகழ்ந்து, சேக்கிழார்
இயற்றிய பெரிய புராணத்தினைப் பலகாற் கற்றும், பலருக்குக் கற்பித்தும், தம் வாழ்நாள்
முழுவதும் சேக்கிழார்பாற் பேரன்பும், பேரீடுபாடும்கொண்டு விளங்கியவர்.
|