சிதம்பரம்
சென்று பாரதியாரைக் கண்டு தமது விருப்பத்தைத்
தெரிவித்தனர். பாரதியார்
சமரசக்கொள்கையுடையவராதலால் செட்டியாருக்கு
மதத்துவேஷம் உண்டோ வென்றறிய
வேண்டி ‘நான்
விஷ்ணுகதைகள் மட்டுமே கூறவல்லேன்’ என்றனர்.
“எக்கதையாயினுமென்? தங்கள் திருவாயினின்று
வருமேல் நற்கதையே யாகும். ஆதலால்
தாங்கள் திருவுளங்கொண்டு,
எனது விருப்பத்தை நிறைவேற்றவேண்டும்” என்று
செட்டியார்
மீட்டும் வேண்டினர். அதன்மேல்
பாரதியார் அவர் வேண்டுகோளுக்கு இணங்கி
அவருடன்
திருநாகை சென்றார். கதா காலட்
சேபத்துக்கென்று செட்டியார் தமது வீட்டில்
யாவும்
சித்தஞ்செய்து தமது நண்பர்களுக்கெல்லாம் செய்தியனுப்பி
வரவழைத்துச் சபை
கூட்டினார்.
பாரதியார் கதாப் பிரசங்கஞ்செய்யச் சபாநாயகராக
அமர்ந்தார். ஆயினும் அது
வரையில், அவர் எச்
சரித்திரத்தைப் பிரசிங்கிப்பது என்று கூட நிச்சயித்தாரில்லை.
நாழிகைகள் பல கழிந்தன. சபையோர் சபாநாயகர்
வாக்கிலிருந்து வரும் கதை யாதோ
வென்று ஆவலோடு எதிர்பார்த்திருந்தார்கள்.
பாரதியார் மௌனமாய் வீற்று
சிந்தித்துக்கொண்டிருந்தார். உணவு கொள்ளும்
காலம் கிட்டிவிட்டது. சபையோர்
பாரதியாரை உணவு கொள்ளும்படி வேண்டினர். அதற்கவர்
“எந்த பக்தர் சரித்திரத்தைக்
கூறலாமென்று
சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். என் உள்ளத்தே
அந்தரியாமியாயுள்ள ஈசன்
என் சிந்தையில்
ஒரு பக்தரைத் தெரிந்தெடுத்துக்
குறிப்பிக்கும் வரையில் யான் உணவு
கொள்ளேன்,’ என்றனர். “ஆனாற் சிறிது சிற்றுணவேனும்
ஏற்றுருளுங்கள்”
என்று
செட்டியார்,
ஒரு தட்டில் சில கனிவர்க்கங்களும், பாத்திரத்தில்
|