அழியாது என்று கூறுவர். அவ்வனத்திலுள்ள மரங்கள், கொடிகள், செடிகள், உயிர்ப்
பொருள்கள் இவற்றை அளவிட்டுரைக்க யாராலும் இயலாது. அப்பெருங் காட்டின்
நடுவில் குறவருங்கண்டு மருளத்தக்க குன்றம் ஒன்றிருந்தது.
அக்குன்றினருகில் குறவர்வாழுஞ் சிற்றூர் இருந்தது. அவ்வூர்வாழ் சிறார்களுடன்
யானைக் கன்றும் புலிக்குட்டியும் கூடி விளையாடும். யானை, புலி, கரடி, சிங்கம்
முதலிய விலங்கினங்கள் கூடி யெழுப்புகின்ற ஒலி எங்கும் இடிமுழக்கம் போலக்
கேட்கும். யானைக் கொம்பில் வெடித்த முத்தும் மூங்கிற் கணுவிற்றெறித்த முத்தமும்
ஒளி வீசிப் பரந்து கிடக்கும். இத்தகைய வளம் செறிந்த பெருவரை மேல் தவமுனிவர்
சேரி ஒன்றிருந்தது.
அச்சேரியில் மறையொலி முழக்கமும் வேள்வித்தீ வளர்ப்போர் ஓது மந்திரவொலி
முழக்கமும், வானவரைக் கூவியவி யளிக்கும் ஒலியும், அவ்வானவர் அவியேற்கும்
ஒலியும், அவி யளித்தோர்க்கு ஆசி கூறும் ஒலியும் கலந்து பேரொலியாய்க் கடல்
போல நீங்காது நிற்கும். தருப்பை கொய்வோர் சிலர், சமிதை தேடுவார் சிலர், மாவிலை
பறிப்பார் சிலர், ஆனைந்து கூட்டுவார் சிலர், பவுத்திர முடிவார் சிலர், நந்தனவனஞ்
சென்று நறுமலர் கொணர்வார் சிலர், வருகின்ற பெருந்தவ முனிவருக்கு உபசாரம்
வழங்குவார் சிலர், சரியை கிரியை யோகம் ஞானம் என்ற நால் வகை நிலையில்
நிற்பார் சிலர், அவற்றைக் கற்பார் பலர், கற்பிப்பார் சிலர், நால் வேதங்களையும் ஒதுவார்
பலர், ஒதுவிப்பார் சிலர், மெய்ப்பொருள் பொய்ப்பொருள் விசாரஞ் செய்வார் பலர்,
இவ்வாறு ஆங்குள்ள அந்தணர் தமக்குரிய தொழில் புரிய விளக்க முற்றிருந்தது
அச்சேரி.
அம்முனிவர் சேரியிற் குசேலன் என்ற பெயருடையோன் ஒருவன் தோன்றினன்.
பாற்கடலிற் பனிமதியந் தோன்றியது போன்று சிறப்பளித்தது அத்தோற்றம். பிறந்து
மொழி பயின்ற காலமுதல் தேவிற் சிறந்த திருமால் பொற்பதத்தைச் சிந்தித்து வந்தித்து
வாழ்ந்தான் அக்
|