|
ஆத்தி சூடி யமர்ந்த
தேவனை
ஏத்தி
யேத்தித் தொழுவோ மியாமே |
(பதவுரை)
ஆத்தி-திருவாத்திப் பூமாலையை, சூடி-தரிப்பவராகிய
சிவபெருமான், அமர்ந்த-விரும்பிய,
தேவனை-விநாயகக் கடவுளை, யாம்-நாம்,
ஏத்தி ஏத்தி - வாழ்த்தி வாழ்த்தி,
தொழுவோம்-வணங்குவோம்.
(பொழிப்புரை)
சிவபெருமான் விரும்பிய விநாயகக் கடவுளை நாம் பலகாலும் துதித்து
வணங்குவோம். விநாயகக் கடவுள் சிவபெருமானுக்கு மூத்த பிள்ளையார் ஆதலின், சிவபெருமான்
விரும்பிய தேவன் என்று கூறப்பட்டார். ஏ:
ஈற்றசை.
|