கடவுள் வாழ்த்து
பிரணவப் பொருளாம் பெருந்தகை ஐங்கரன் சரண அற்புதமலர் தலைக்கணி வோமே
|
(பதவுரை) |
பிரணவம் - பிரணவ மந்திரத்தின்; பொருள் ஆம் -
அருத்தமாகிய, பெருந்தகை - பெருந்தன்மையுடைய,
ஐங்கரன் - ஐந்து கைகளை யுடையவராகிய விநாயகக் கடவுளின், சரணம்
- திருவடியாகிய, அற்புதம் - அதிசயமிகுந்த,
மலர் - செந்தாமரை மலரை, தலைக்குஅணிவோம் -
தலையில் சூடிக்கொள்வோம் என்றவாறு.
|
(பொழிப்புரை)
|
பிரணவ மந்திரத்தின் பொருளாகிய விநாயகக்கடவுளின்திருவடிகளைவணங்குவோம்
என்றவாறு. பிரணவம் எல்லாமந்திரங்களுக்கும், வேதத்திற்கும் முதலாக வுள்ளது யாம்என்னும்
எழுவாய் தொக்குநின்றது; ஏ : ஈற்றசை
|
| |