வாழ்த்து

வாழிய நலனே வாழிய நலனே.
 

(பதவுரை)


(பொ-ரை)

நலன் - எல்லா நன்மைகளும், வாழிய - வாழ்க, நலன் - எல்லா நன்மைகளும், வாழிய - வாழ்க.

எல்லா நலங்களும் வாழவேண்டும்; எல்லா நலங்களும் வாழவேண்டும்.

நலங்களாவன: மழை, பயிர், பசு, அறம் முதலியன. நன்மை வாழவேண்டு மென்றமையால் தீமை ஒழிய வேண்டுமென்பதுமாயிற்று. மகிழ்ச்சியால் இருமுறை கூறினார். ஏ : அசை.

நறுந்தொகை மூலமும் உரையும் முற்றிற்று.