20
நன்றியுரை
இந்த   ஆய்வுப்பதிப்பு வெளிவர முக்கிய காரணமாயிருந்தவர்
டாக்டர் தே.வேலப்பன் அவர்கள். கவிமணியின் தம்பியின்  மகனான
இவரை நாங்கள் தொடர்ந்து     சந்தித்த போதெல்லாம் சலிக்காமல்
ஆலோசனை  வழங்கினார். ஒரு அணிந்துரையும் தந்தார்.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர்டாக்டர்
இ.சுந்தரமூர்த்தி அவர்களை    நாங்கள் அணிந்துரை தர வேண்டிய
போது மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டு தந்தார்.

மறைந்த முதுபெரும்புலவர் செ.சதாசிவம்   பிள்ளை அவர்கள்
(1905-2002) 1943ஆம் ஆண்டிலேயே    கவிமணியின் வரலாற்றைப்
புத்தகமாக்கியவர். கவிமணியுடன் 25 ஆண்டுகளுக்கு மேலாக உறவு
கொண்டிருந்தவர். அவர் எங்களுக்கு எல்லாநிலைகளிலும் உதவினார்.
96 வயதில்     படுக்கையில் இருந்த நிலையிலும் “ஒரே பதிப்பாகக்
கவிமணியின் பாடல்களைக் கொண்டு வாருங்கள்; மருங்கூர் முருகன்
உங்களைக் காப்பாற்றுவான்”       என்ற கண்ணீர் மல்க எங்களை
ஆசிர்வதித்தார்.

எங்கள் ஆசிரியர் மூத்த பேராசிரியர் டாக்டர் தெ.ந.மகாலிங்கம்
அவர்கள் எங்களுக்குக் கவிமணியைக் கற்பித்தவர். இவர் எங்களைத்
தொடர்ந்து ஊக்கப்படுத்தினார். ஆலோசனை வழங்கினார். தமிழறிஞர்
கு.பச்சைமால், கவிஞர் செந்தீ நடராஜன் ஆகியோருடன் உரையாடிய
போது கிடைத்த தகவல்கள் எங்களுக்குப் பெரிதும் உதவின.

இப்பதிப்பை ஒருசேரப் பார்த்து, ஆலோசனை தந்தவர் அறிஞர்
அண்ணா கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ஜெய.குமார
பிள்ளை அவர்கள்.

நாங்கள் எங்கள்     ஆய்விற்காகத் தமிழகத்தின் பழைய நூல்
நிலையங்களுக்குச் சென்ற போதெல்லாம் அறிமுகமில்லாத யார் யாரோ
உதவினார்கள்.        தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம், மதுரைப்
பல்கலைக் கழகம்,    காரைக்குடி அழகப்பா நிகர் நிலைப் பல்கலைக்
கழகம், ஆகியவற்றில்.